பிரெடெரிக் ஜேம்சு கார்கிரீவுசு
பிரெடெரிக் ஜேம்சு கார்கிரீவுசு (Frederick James Hargreaves) (10 பிப்ரவரி 1891 – 4 செப்டம்பர் 1970) ஒரு பிரித்தானிய வானியலாளரும் ஒளிநுட்பரும் ஆவார்.
இவர் பிரித்தானியாவில் மிகவும் புகழ்பெற்ற ஒளிநுட்பவியலாளர் ஆவார். இவர் வானியல் தொலைநோக்கிகளுக்கான ஆடியாக்கத்திலும் ஓளிநுட்பத்திலும் வல்லுனர் ஆவார். இவர் வியாழன் வளிமண்டல வட்டாரங்களிலும் பட்டைகளிலும் நிகழும் கொந்தளிப்புகளைத் தொடர்ந்து விரிவாக நோக்கீடுகள் செய்து அவற்றின் வரைபடங்களை வரைந்துள்ளார்.
இவர் 1942 முதல் 1944 வரை பிரித்தானிய வானியல் கழகத் தலைவராக இருந்துள்ளார்.
இவர் காக்சு கார்கிரீவுசு-தாம்ப்சன் குழுமத்தை உருவாக்கி அதில் பங்கு தாரர் ஆனார். இதற்கான கட்டிடத்தைச் சுசக்சில் உள்ள பிரைட்டன் நகரப் பிரெசுட்டன் பார்க்கு அருகில் அமைந்த முதன்மை வழித்தடத்தின் வளாகத்தில் எழுப்பினார். பின்னர், கேன்கில் அசிலம் வளாகத்து சுரங்க ஆழ்மட்ட வான்படை முற்றுகை எண் 4 அமைவிடத்துக்கு நல்ல சூழலுக்காக மாற்றினார். அவ்வளாகம் ஆடிகளுக்குச் செம்மையாகச் சாணைபிடிக்கவும் துல்லியமாக மேற்பரப்புத் தொடர்ச்சியை உருவாக்கவும் சிறந்த இடமாகவும் அதிர்வேதும் அற்றதாகவும் அமைந்தது. இது 1952 முதல் 1970 வரை அங்கு செயற்பட்டது. இங்கு செய்த ஆடிகள் பட்டறைகளில் பின் வந்த உயர் முன்னேற்ற ஓர்தல் கருவிகளால் சரிபார்த்தபோது, கார்க்கிரீவுசு கைவெட்டு ஆடிகள் சோடிய ஒளி அலைநீளம் மூன்றளவுக்குத் துல்லியமாக இருத்தல் கண்டறியப்பட்டது.
இவர் 1936 முதல் 1994 வரை நார்மன் பிழ்சர் தொலைநோக்கி ஆக்கக் குழுமத்துக்குக் கேன்கில் சுரங்கத்தில் ஆடியாக்கப் பயிற்சி அளித்துள்ளார். நார்மன் பிழ்சர் வான்காணகம் சுரேவில் உள்ள கென்லியில் அமைக்கப்பட்டுள்ளது.
தகைமைகளும் விருதுகளும்
தொகு- இவர் 1938 இல் ஜாக்சன் குவில்ட்டு பதக்கத்தைப் பெற்றார்.
- நிலாவின் கார்கிரீவுசு குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிப்பட்டது.
நூல்தொகை
தொகு- The size of the universe, 1948, Penguin Books.
- A Description of a Reflecting Telescope with Unusual Features, Quarterly Journal of the Royal Astronomical Society, 3 (March 1962) 25-30.
- A Home-made Equatorial, The Observatory, 49 (Oct. 1926) 299-302.
- The Northumberland Telescope at Cambridge Observatory, The Observatory 60 (Dec. 1937) 322-325.
- Obituary QJRAS 12 (1971), p.336
- Obituary JBAA 82 (1971), p.43