பிரெய்ட்டன் சுழற்சி

ஒர் வெப்பஇயக்கச் சுழற்சி

பிரெய்ட்டன் சுழற்சி (Brayton cycle) என்பது அழுத்த எரிபற்றல் முன் பின்னியக்க உந்துதண்டு உள் எரி பொறியில் பயன்படும் ஒர் வெப்பஇயக்கச் சுழற்சி ஆகும். இது சார்ச் பிரெய்ட்டர் என்ற அமெரிக்க பொறியாளர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு திறந்த அமைப்பை உடையது. இங்கு மாறாத அழுத்ததில் எரிதல் நிகழ்வு (combustion) நடைபெறுகிறது. அதாவது வெப்ப இயக்க சுழற்சியின் போது அழுத்தத்தை மாறிலியாக வைத்துக்கொண்டு எரிதல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த சுழற்சியில் இரண்டு மாறா ஆழுத்த நிலையில் வெப்பமாக்கல் நிகழ்வும் இரண்டு அகவெப்பமாறா நிலையில் பருமன் சுருங்குதல் மற்றும் விரிவடைதல் நிகழ்வும் நடைபெறுகிறது. இதனை அழுத்த- பருமன் விளக்க படம் மூலம் எளிதாக புரிந்துகொள்ள இயலும்.

கார்னாட் வெப்ப இயக்க பொறி
பிரெய்ட்டன் சுழற்சியின் அழுத்த-பரும மற்றும் வெப்ப-என்ட்ரோபி விளக்கப்படம்

வழிமுறை

தொகு

இவ்வழிமுறைகளை பின்வறுமாறு விளக்கலாம்

வழிமுறை 1-2 : அகவெப்பமாறா நிலையில் பருமன் அளவு சுருங்கும் நிகழ்வு
வழிமுறை 2-3 : மீளக்கூடிய மாறா அழுத்தநிலையில் வெப்பமாக்கல் நிகழ்வு
வழிமுறை 3-4 : அகவெப்பமாறா நிலையில் பருமன் அளவு விரிவடைதல் நிகழ்வு
வழிமுறை 4-1 : மீளக்கூடிய மாறா அழுத்தநிலையில் குளிர்விக்கும் நிகழ்வு

இந்த வழிமுறையின் மூலமாக எரிகாற்றிழுப்பு வான்சுழலி (air breathing jet engines) மற்றும் வளிமச் சுழலி (Gas turbine) இயங்குகிறது. இது வெப்ப ஆற்றலை வேலை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

Wஉள் - என்பது வாயு சுருங்குவதன் மூலமாக உந்துதண்டினால் செய்யப்பட்ட வேலை ஆற்றல்
Qஉள் - என்பது பெட்ரோல் அல்லது எரிபொருள் மூலமாக உருவாக்கப்பட்ட வெப்ப ஆற்றல்
Wவெளி - என்பது வாயு விரிவடைதன் மூலமாக உந்துதண்டினால் செய்யப்பட்ட வேலை ஆற்றல்
Qவெளி - என்பது மீதமுள்ள எரிபொருளின் வெப்ப ஆற்றல்
உள் என்பது உள்ளீட்டையும் வெளி என்பது வெளியீட்டையும் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெய்ட்டன்_சுழற்சி&oldid=2957138" இலிருந்து மீள்விக்கப்பட்டது