பிரேமலோச்சனா

பிரேமலோச்சனா (Pramlocha (சமக்கிருதம்: प्रम्लोचा),இந்து தொன்மவியலில் தேவலோகத்தில் வாழும் அரம்பையர்களில் ஒருவர். சமஸ்கிருத மொழியில் பிரேமம் என்பதற்கு காதல் என்றும் லோச்சனம் என்றும் கண்கள் என்று பொருள். (காதல் வயப்படும் கண்களைக் கொண்டவள் என்று பொருள்). கண்டு ரிஷியின் காதல் வாழ்க்கையில் பிரேமலோச்சனை பல நூறு ஆண்டுகளாக இருந்துள்ளார்.[1]

பிரேமலோச்சனா
வகைஅரம்பையர்
இடம்தேவலோகம்
குழந்தைகள்மரிஷா
நூல்கள்பிரம்ம புராணம்

தொன்ம வரலாறு

தொகு

பிரம்ம புராணத்தில் கண்டு ரிஷியின் தவ வாழக்கையை அழிக்க தேவேந்திரன் அப்சரஸ் பிரேமலோச்சனாவை பூலோகத்திற்கு அனுப்பி வைக்கிறார். காம தேவன் உதவியுடன் பிரேமலோச்சனா கண்டு முனிவரை தன் அழகில் மயக்கி முனிவரின் தவ வாழ்க்கையை கெடுத்து, அவருடன் பல்லாண்டுகள் வாழ்க்கை நடத்திய பின் தேவலோகம் சென்றார்.[2] விஷ்ணு புராணத்தில் (1, அத்தியாயம் 15, ஸ்லோகம் 32) கண்டு முனிவர் பிரேமலோச்சனாவுடன் 907 ஆண்டுகள் காதல் வாழ்க்கையில் ஈடுபட்டார் எனக்கூறுகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. www.wisdomlib.org (2013-05-25). "Kandu". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-04.
  2. www.wisdomlib.org (2018-03-29). "Narrative of Sage Kaṇḍu [Chapter 69]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமலோச்சனா&oldid=4131418" இலிருந்து மீள்விக்கப்பட்டது