பிரேமாபாய் அரங்கம்
பிரேமாபாய் அரங்கம் (Premabhai Hall) இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாத்தில் கைவிடப்பட்ட ஓர் அரங்கமாகும். [1] அரங்கம் குசராத்து வித்யா சபைக்கு சொந்தமானதாகும். [2] [3]
பிரேமாபாய் அரங்கம் | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | புரூட்டலிசுட்டு கட்டடக் கலை |
இடம் | அகமதாபாது |
நிறைவுற்றது | 1972 |
உரிமையாளர் | குசராத்து வித்யா சபா |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | பி.வி. தோசி |
அமைப்புப் பொறியாளர் | மகேந்திர இராச்சு |
பிற தகவல்கள் | |
இருக்கை திறன் | 1,000 |
வரலாறு
தொகுஆங்கிலேயர் காலத்தில், இந்த அரங்கம் நாடக நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளில் பிரேமாபாய் அரங்கம் மறுவடிவமைப்பு செய்ய முன்மொழியப்பட்டது. இத்திட்டத்திற்காக பி.வி. தோசி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 ஆம் ஆண்டில் புரூட்டலிச கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. [4]
1990 ஆம் ஆண்டுகளில் தீயணைப்பு ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக அரங்கம் கைவிடப்பட்டது. தோல்வியடைந்த இடிப்புத் திட்டம் கைவிடப்பட்டாலும் கட்டிடம் அப்படியே உள்ளது. [4]
விளக்கம்
தொகுஇந்த அரங்கம் புரூட்டலிச கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது, முழு அமைப்பும் வலுவூட்டப்பட்ட கற்காரையால் கட்டப்பட்டுள்ளது. அரங்கத்தில் 1000 பேர் அமரும் வசதி கொண்டது.[2]