பிரையா
பிரையா (ஆங்கில மொழி: Praia, போர்த்துக்கேய மற்றும் கேப் வேர்டியன் கிரியோல் மொழிகளில் கடற்கரை எனப் பொருள்படும்) மேற்கு ஆபிரிக்கத் தீவு நாடான கேப் வேர்ட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது சாண்டியாகோ தீவின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தீவின் துறைமுகத்தையும் நாட்டின் நான்கு சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றையும் கொண்டுள்ள இந்நகரம் சிறிய ஒரு மேட்டுநிலத்தில் இருப்பதால் பீடபூமி என அழைக்கப்படுகின்றது. நாட்டின் வர்த்தக மையமான இந்நகரிலிருந்து கோப்பி, கரும்பு மற்றும் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பிரையா | |
---|---|
நாடு | கேப் வர்டி |
உள்ளூராட்சி | பிரையா மாநகரசபை |
ஏற்றம் | 1 m (3 ft) |
மக்கள்தொகை (2010 மதிப்பீடு.) | |
• மொத்தம் | 1,27,832 |