பிரைல்சாயெவ் வினை

பிரைல்சாயெவ் வினை (Prilezhaev reaction) என்பது ஒரு ஆல்க்கீனுடன் பெராக்சி அமிலம் வினைபுரிந்து எப்பாக்சைடு உருவாகும் வினையைக் குறிக்கிறது[1]. பிரைல்சுச்சாயெவ் வினை அல்லது பிரைல்சாயெவ் எப்பாக்சினேற்றம் என்ற பெயர்கலாலும் இவ்வினை அழைக்கப்படுகிறது. நிக்கோலசு பிரைல்சுச்சாயெவ் இவ்வினையைக் கண்டறிந்த காரணத்தால் இப்பெயர் சூட்டப்பட்டது. 1909 இல் இவர் பிரைல்சாயெவ் வினையைக் கண்டறிந்தார். இவ்வினையில் பெராக்சி அமிலமாக பரவலாக மெட்டா-குளோரோபெராக்சிபென்சாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இவ்வமிலம் நிலைப்புத் தன்மையுடனும் பெரும்பாலான கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியதாகவும் உள்ளது[2]. சிடைரின் உடன் பெர்பென்சாயிக் அமிலத்தை வினைபுரியச்செய்து, சிடைரின் ஆக்சைடு உருவாக்கும் வினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.:[3]

பிரைல்சாயெவ் வினை
பிரைல்சாயெவ் வினை

வினைவழிமுறை

தொகு

வண்ணத்துப்பூச்சி வழிமுறையின் வழியாக பிரைல்சாயெவ் வினை நிகழ்கிறது"[4]. பெராக்சைடு மின்னணு கவரியாகவும், ஆல்க்கீன் மின்னணு மிகுபொருளாகவும் இவ்வினையில் பார்க்கப்படுகின்றன. இவ்வினையை மிகவும் அடர்த்தி மிகுந்த வினையாகக் கருதவேண்டும். கீழே கொடுக்கப்பட்ட எண்கள் எளிமை கருதி கொடுக்கப்பட்டவையாகும். O-O சிக்மா சிடார் ஆர்பிட்டலை C-C Pi எலக்ட்ரான்கள் தாக்குவதற்கு வண்னத்துப்பூச்சி வழிமுறை அனுமதிக்கிறது[5]

 
வண்ணத்துப்பூச்சி வழிமுறை

.

மேற்கோள்கள்

தொகு
  1. Nikolaus Prileschajew (1909). "Oxydation ungesättigter Verbindungen mittels organischer Superoxyde". Berichte der deutschen chemischen Gesellschaft 42 (4): 4811–4815. doi:10.1002/cber.190904204100. 
  2. László Kürti and Barbara Czakó. (2005). Strategic Applications of Named Reactions in Organic Synthesis: Background and Detailed Mechanisms. Elsevier Academic Press. p. 362. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0124297854.
  3. Harold Hibbert and Pauline Burt (1941). "Styrene Oxide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0494. ; Collective Volume, vol. 1, p. 494
  4. Paul D. Bartlett (1950). "Recent work on the mechanisms of peroxide reactions". Record of Chemical Progress 11: 47-51. 
  5. John O. Edwards (1962). Peroxide Reaction Mechanisms. Interscience, New York. pp. 67–106.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரைல்சாயெவ்_வினை&oldid=4092768" இலிருந்து மீள்விக்கப்பட்டது