பிரை ஒட்டோ
பிரை பால் ஓட்டோ (Frei Paul Otto) என்பவர் ஒரு செருமன் கட்டிடக்கலைஞரும் அமைப்புப் பொறியாளரும் ஆவார். இழுவை அமைப்புக்கள், மென்றகட்டு அமைப்புக்கள் உள்ளிட்ட இவரது இலகு கட்டமைப்புக்கள் பலரது கவனத்தை இவர்பால் ஈர்த்தன. 1972 இல் மியூனிச்சில் இடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக் விளையாட்டரங்கின் கூரையும் இவ்வாறான அமைப்பாகும்.
பிரை ஒட்டோ | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | செருமன் |
பிறப்பு | ஃபிரை பால் ஒட்டோ 31 மே 1925 சீக்மார், செருமனி |
இறப்பு | 9 மார்ச்சு 2015 Warmbronn, Germany | (அகவை 89)
பணி |
2006 க்கான பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான அரச நிறுவனத்தின் தங்கப்பதக்கம் ஓட்டோவுக்கு வழங்கப்பட்டது. ஓட்டோ இறப்பதற்குச் சற்று முன்னராக 2015 ஆம் ஆண்டில் கட்டிடக்கலைக்கான பிரிட்ஸ்கர் பரிசையும் இவர் பெற்றார்.
இளமைக் காலம்
தொகுஓட்டோ செருமனியில் உள்ள சீக்மார் என்னும் இடத்தில் பிறந்து பேர்லினில் வளர்ந்தார். இவர் பேர்லினில் கட்டிடக்கலை பயின்றார். பின்னர், Luftwaffe க்குள் இழுக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரின் இறுதி ஆண்டுகளில் போர் விமானியாகப் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பிரான்சில் இருந்த போர்க் கைதிகள் முகாமில் இவருக்குப் பயிற்சி கிடைத்தது. விமானப் பொறியியல் பயிற்சி, கட்டிடப் பொருட்கள் பற்றாக்குறை, வீடுகளுக்கான அவசரத் தேவை ஆகியவை காரணமாக, வீடுகளுக்காகக் கூடாரங்களைப் பயன்படுத்துவதற்கான சோதனைகளில் ஈடுபட்டார்.[1] போர் முடிந்த பின்னர் குறுகிய காலம் ஐக்கிய அமெரிக்காவில் கல்விகற்ற இவர், எரிக் மென்டெல்சன், மீஸ் வான் டெர் ரோ, ரிச்சார்ட் நியூட்ரா, பிராங்க் லோயிட் ரைட் போன்ற புகழ் பெற்ற கட்டிடக் கலைஞர்களைச் சந்தித்துள்ளார். 1952 ஆம் ஆண்டில் செருமனியில் ஒரு தனியார் நிறுவனத்தை இவர் தொடங்கினார். காசெல் என்னும் இடத்தில் நடந்த “பெடரல் பூங்காக் கண்காட்சியில் அமைக்கப்பட்ட இவரது ---- வடிவக் கம்பிவட வலை இசை அரங்கம், இவர் மீது முதல் குறிப்பிடத்தக்க கவனம் ஏற்படக் காரணமாயிற்று. 1954 இல் இழுவைக் கட்டுமானத் துறையில் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது.[1]
இலகு இழுவை மற்றும் மென்றகட்டுக் கட்டமைப்புக்களில் சிறப்புத் திறமை பெற்ற அமைப்புக் கணிதம், குடிசார் பொறியியல் ஆகியவற்றின் முன்னேற்றங்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தார்.[1] 1964 இல் இசிடட்கார்ட் பல்கலைக்கழகத்தில் இலகுக் கட்டமைப்புக்களுக்கான நிறுவனம் ஒன்றை உருவாக்கிய ஓட்டோ, பல்கலைக் கழகப் பேராசிரியராக ஓய்வு பெறும்வரை அந்நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[1] 1967 இன் மொன்ட்ரீல் கண்காட்சிக்கான செருமன் அரங்கம், 1972 மியூனிச் ஒலிம்பிக் அரங்கின் கூரை, என்பன இவரது முக்கியமான வேலைகளுள் அடங்கும். இவர் உலகின் பல இடங்களிலும் விரிவுரைகள் ஆற்றியுள்ளதுடன், கட்டிடக்கலைக் கழகத்தின் கட்டிடக்கலைப் பள்ளியில் கற்பித்தும் உள்ளார். ஊக்கே பூங்காவில் உள்ள அப்பள்ளியின் காட்டு வளாகத்தில் ஆய்வு வசதிக்கான கட்டிடங்கள் சிலவற்றையும் ஓட்டோ வடிவமைத்துள்ளார்.[2]
இறக்கும்வரை ஓட்டோ ஒரு கட்டிடக் கலைஞராகவும், பொறியாளராகவும் செயற்பட்டு வந்தார். ‘’புரொட்டேஜ் மஹ்மூத் போடோ ராஷ்’’ என்னும் நிறுவனத்தில் சார்பாக மத்திய கிழக்கின் பல திட்டங்களுக்கு இவர் ஆலோசகராகவும் செயற்பட்டார். முழுவதும் கடதாசியாலேயே செய்யப்பட்ட கூரையைக் கொண்ட எக்ஸ்போ 2000 க்கான சப்பான் அரங்கு மிக அண்மைக்காலத்தில் அவர் ஈடுபட்டிருந்த திட்டங்களுள் ஒன்று, இத்திட்டத்தில் சிகெரு பான் என்பவருடன் சேர்ந்து அவர் பணியாற்றியிருந்தார். 2002 ஆம் ஆண்டில், செப்டெம்பர் 11 தாக்குதலையும், அதனால் பாதிக்கப்பட்டோரையும் நினைவு கூரும் வகையில் வெனிசுலா அரங்குக்கான திறந்து மூடக்கூடிய கூரை ஒன்றையும் இன்னொரு நிறுவனத்துடன் சேர்ந்து வடிவமைத்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Biography: Frei Otto". The Hyatt Foundation. பார்க்கப்பட்ட நாள் 11 March 2015.
- ↑ 2.0 2.1 "Frei Otto". Praemium Imperiale. Archived from the original on 24 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச்சு 2015.