பிரோன்

ஒரு நிறைவுறாத ஆறு உறுப்பு வளையத்தில் ஓர் ஆக்சிசன் அணுவும் ஒரு கீட்டோன் வேதி வினைக்குழுவும் இட

பிரோன்கள் (Pyrones) எனப்படுபவை பல்லினவளைய வேதிச்சேர்மங்களின் ஒரு வகையாகும். இவை பிரனோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகைச் சேர்மங்களில் ஒரு நிறைவுறாத ஆறு உறுப்பு வளையத்தில் ஓர் ஆக்சிசன் அணுவும் ஒரு கீட்டோன் வேதி வினைக்குழுவும் இடம்பெற்றிருக்கும். [1] 2-பிரோன், 4-பிரோன் என இரண்டு மாற்றியன் சேர்மங்களும் காணப்படுகின்றன. 2-பிரோன் α-பிரோன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. குமாரின் வளையச் சேர்மத் திட்டத்தில் இயற்கையாகவே ஒரு பகுதியாக இது இடம்பெற்றிருக்கும். 4-பிரோன் மாற்றியம் γ-பிரோன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. குரோமோன், மால்டோல் மற்றும் கோச்சிக் அமிலம் போன்ற சில வேதிப்பொருட்களில் இது காணப்படுகிறது.

2-பிரோன்
4-பிரோன்

மேற்கோள்கள் தொகு

  1. Streitwieser, Jr., Andrew; Heathcock, Clayton H. (1985). Introduction to Organic Chemistry (Third ed.). pp. 1038–1040. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-418140-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரோன்&oldid=3338822" இலிருந்து மீள்விக்கப்பட்டது