பிரோல்-2-கார்பாக்சிலிக் அமிலம்

பிரோல்-2-கார்பாக்சிலிக் அமிலம் (Pyrrole-2-carboxylic acid) HNC4H3CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். பிரோல் சேர்மத்தின் இரண்டு மோனோகார்பாக்சிலிக் அமிலங்களில் இது ஒன்றாகும். வெண்மை நிறத் திண்மமாகக் காணப்படும் இது, இயற்கையில் புரோலின் என்ற அமினோ அமிலத்தை ஐதரசன் நீக்க வினைக்கு உட்படுத்துவதால் தோன்றுகிறது.[1] இதேபோல பிரோலை கார்பாக்சிலேற்றம் செய்தாலும் இது உருவாகிறது.[2]

பிரோல்-2-கார்பாக்சிலிக் அமிலம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
2-மியாலைன், 2-மினாலைன், மினாலின், மினாலைன்
இனங்காட்டிகள்
634-97-9
பண்புகள்
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 206 °C (403 °F; 479 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Thomas, Michael G.; Burkart, Michael D.; Walsh, Christopher T. (2002). "Conversion of L-Proline to Pyrrolyl-2-Carboxyl-S-PCP during Undecylprodigiosin and Pyoluteorin Biosynthesis". Chemistry & Biology 9 (2): 171–184. doi:10.1016/S1074-5521(02)00100-X. பப்மெட்:11880032. 
  2. Wieser, Marco; Yoshida, Toyokazu; Nagasawa, Toru (2001). "Carbon dioxide fixation by reversible pyrrole-2-carboxylate decarboxylase and its application". Journal of Molecular Catalysis B: Enzymatic 11 (4–6): 179–184. doi:10.1016/S1381-1177(00)00038-2.