பிர் ராதா செர்பா

பிர் ராதா செர்பா (Bir Radha Sherpa) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடனக் கலைஞர் ஆவார். 2017 ஆம் ஆண்டு இசுடார் பிளசு தொலைக்காட்சியில் நடைபெற்ற டான்சு பிளசு (பருவம் 3) மற்றும் டான்சு சாம்பியன்கள் போட்டியை வென்றதற்காக இவர் புகழ்பெற்றார்.

பிர் ராதா செர்பா
Bir Radha Sherpa
தனது தாயாருடன் பிர் ராதா செர்பா.
பிறப்பு15 ஆகத்து 1999
சில்சார், அசாம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சிராக்கு , பி.ஆர் எசு.
கல்விகுருச்சரண் கல்லூரி, சில்சார்
பணிநடனக் கலைஞர்
பாணிசிறுவர் மற்றும் சமகாலம்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

1999 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று அசாம் மாநிலத்திலுள்ள சில்சார் நகரத்தில் பிர் ராதா செர்பா பிறந்தார். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிர், சிறுவயதில் நடனம் ஆடுவதில் ஆர்வம் காட்டினார், மேலும் எந்தவொரு குறிப்பிடத்தக்க பெரிய நடனப் போட்டியிலும் போட்டியிடுவதற்கு முன்பு தனது பகுதிகளில் பல நேரடி நிகழ்வுகளில் பங்கேற்றார்.[1]

தொழில்

தொகு

டான்ஸ் பிளசு

தொகு

பிர் டான்சு பிளசு (பருவம் 3) நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டார். புனித் பதக் தலைமையிலான குழுவினர் இவரை தேர்ந்தெடுத்தனர். இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்காக முழு பருவத்திலும் பிர் ஆதிக்கம் செலுத்தினார், இறுதியில் அப்போட்டியை வெற்றிகரமாக வென்றார்.[2][3][4] டீம் புனித்து அணியில் ஒரு நடனக் கலைஞரின் முதல் வெற்றி இதுவாகும்.[5]

நடன வெற்றியாளர்கள்

தொகு

டான்சு வெற்றியாளர்கள் போட்டியில் டான்சு பிளசு நிகழ்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்த பிர் தேர்ந்தெடுக்கப்பட்டார.[6] அதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற அல்லது இரண்டாம் இடத்தைப் பிடித்த வெற்றியாளர்களான நடனக் கலைஞர்கள் இடம்பெற்றனர். விருப்பமாக இப்போட்டியில் நுழைந்து, பிர் இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார்.[7][8]

டான்சு இந்தியா டான்சு லி'ல் மாசுடர்சு

தொகு

பருவம் 4 இல் ஓர் அணிக்கு வழிகாட்டியாக இருந்த பிர், தம்மான் கம்னுவை அந்த பருவத்தின் இரண்டாவது வெற்றியாளர் என்ற பட்டத்தைப் பெற உதவினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Bir Radha Sherpa – Biography".
  2. "Dance Plus season 3: Bir Radha Sherpa wins the show". https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/dance-plus-season-3-bir-radha-sherpa-wins-the-show/articleshow/60813995.cms. 
  3. "Bir Radha Sherpa Wins Dance Plus 3: Here’s A Look At All The Winners Of Dance Plus". https://www.india.com/viral/bir-radha-sherpa-wins-dance-plus-3-heres-a-look-at-all-the-winners-of-dance-plus-2494032/. 
  4. "Bir Radha Sherpa wins Dance Plus 3".
  5. "Bir Radha Sherpa from Punit Pathak's team is the winner of Dance Plus 3.". https://www.indiatoday.in/television/reality-tv/story/congratulations-assam-bir-radha-sherpa-wins-dance-plus-3-punit-pathak-lifetv-1051235-2017-09-24. 
  6. "Dance Champions: On the sets". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://photogallery.indiatimes.com/tv/behind-the-scenes/dance-champions-on-the-sets/articleshow/62240262.cms. 
  7. "Bir Radha Sherpa wins Dance Champions, see photos". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/entertainment/television/bir-radha-sherpa-dance-champions-winner-see-photos-4994269/#:~:text=After%20taking%20home%20the%20trophy,winner%20of%20Dance%20Champions%20too.&text=Bir%20Radha%20Sherpa%20wins%20Dance%20Champions%3A%20His%20stupendous%20and%20consistent,the%20audience%20time%20and%20again.. 
  8. "Bir Radha Sherpa Winner Of The Dance Champions 2017".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிர்_ராதா_செர்பா&oldid=3920472" இலிருந்து மீள்விக்கப்பட்டது