பிறந்த குழந்தை நடத்தை மதிப்பீடு அளவுகோல்

பிறந்த குழந்தை நடத்தை மதிப்பீட்டு அளவுகோல் (Neonatal Behavioral Assessment Scale, NBAS) அல்லது பிராசெல்டன் பிறந்த குழந்தை மதிப்பீட்டு அளவுகோல் (Brazelton Neonatal Assessment Scale, BNAS) என்பது பிறந்த குழந்தையின் நல்லொழுக்கத்தை அளவிட பயன்படுகிறது[1]. 1973 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் பெரி பிராசெல்டன் மற்றும் அவரது சகாக்களால் இந்த அளவுகோல் உருவாக்கப்பட்டது. புதிதாகப் பிறந்த குழந்தையின் திறன்களை குறிப்பால் உணர்த்த இந்த சோதனை உதவுகிறது. பொதுவாக குழந்தை பிறந்து 3 நாட்கள் முதல் 4 வாரங்களுக்குள் ஏதாவது ஒரு நாளில் அக்குழந்தைக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது [1]. புதுமையான இந்த அணுகுமுறை குழந்தை புதியதாகப் பிறந்தாலும் கூட அக்குழந்தை ஒரு மிகவும் வளர்ந்த உயிரினம் என்பதை அங்கீகரிக்கிறது. குழந்தைகளின் பலம், இணக்கம் மற்றும் பாதிப்பு போன்றவற்றை உள்ளடக்கிய சுயவிவர குறிப்புகளை இச்சோதனையின் முடிவு வழங்குகிறது. பெற்றோருடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளுவதற்குமான சிறந்த அணுகுமுறையாகும். முன்னதாக தெரியும் இந்த அறிவு பெற்றோர்கள் குழந்தையுடன் ஆரம்பகால உறவை மேம்படுத்துவதற்கும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் பொருத்தமான வளர்ப்பு உத்திகளை உருவாக்கிக் கொள்ள உதவக்கூடும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Kaplan, R. M., & Sacuzzo, D. P.(2010). Psychological Testing: Principles, Applications, & Issues, Eighth Edition. Belmont, CA: Wadsworth, Cengage Learning

வெளி இணைப்புகள்

தொகு