பிறிவோஸ்ட் கோட்பாடு

சூடான பொருளின் முன் நிற்கும் போது எப்படி வெப்பத்தை உணருகிறோமோ அதேபோல் பனிக்கட்டியின் முன் நிற்கும் போது குளிரை உணர்கிறோம். பனிக்கட்டிக்கும் நமக்குமிடையே வெப்பப் பரிமாற்றம் நிகழும் போது, நமது உடல் பெறுவதைவிட அதிக வெப்பத்தினை இழப்பதால் குளிராக உணர்கிறோம். இதுவே பிறிவோஸ்ட் கோட்பாடு (Prevost's heat exchange theory ) ஆகும்.

வெப்பக் கதிர் வீச்சு சூடான பொருட்களுக்கு மட்டுமே உரித்தான குணமன்று. தனிவெப்பக் கீழ்வரம்பினை (Absolute zero ) விட அதிக வெப்பநிலையிலுள்ள எல்லாப் பொருட்களும் வெப்பக் கதிர்வீச்சுடையன. சூடான ஒரு பொருள் பெறுவதைவிட அதிகக் கதிர்வீச்சினை வெளிவிடுவதால் அதன் வெப்ப நிலைக் குறைகிறது. இதன் காரணமாக அது குளிர்கிறது. வெப்பச் சமன் நிலையிலிருக்கும் ஒருபொருள், சுற்றுப் புறத்திலிருந்து எந்த அளவு கதிர்வீச்சினைப் பெறுகிறதோ அதேயளவு வெப்பத்தை கதிர்வீச்சினால் இழக்கிறது. எனவே அதன் வெப்பநிலை மாறுவதில்லை.

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறிவோஸ்ட்_கோட்பாடு&oldid=2746663" இலிருந்து மீள்விக்கப்பட்டது