பிலவ் எரிவாயு (Blau gas) என்பது புரொப்பேன் வாயுவைப் போன்ற செயற்கை முறையில் ஒளியூட்டும் ஒரு வாயுவாகும். செருமனியின் ஆக்சுபர்கு நகரைச் சேர்ந்த முனைவர் எர்மான் பிலவ் [1][2] கண்டுபிடித்த காரணத்தால் இவ்வாயு பிலவ் எரிவாயு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கனிம எண்ணெய்களை வாலைவடிகலனில் எடுத்து நேப்தா உருவாகும்வரை வெப்பப்படுத்த வேண்டும். பின்னர் இந்நேப்தா அழுத்தக்குறைவுக்கு உட்படுத்தப்பட்டு திரவமாக்கப்படுகிறது. இந்த நிபந்தனைக்கு உட்பட்டு இவ்வாயு எடுத்துச் செல்லப்படுகிறது. எல்.பி.வாயு என்றழைக்கப்படும் திரவ பெட்ரோலிய வாயுவைப் போல வெளிப்படும்போது இவ்வெரி பொருளும் வாயு நிலையை அடைகிறது. வேதிப்பண்புகளின் அடிப்படையில் இவ்வாயுவின் பண்புகள் நிலக்கரி வாயுவை ஒத்துள்ளன [3][4].

முனைவர் எர்மான் பிலவ்

செருமன் மொழியில் பிலவ் என்ற சொல்லுக்கு நீலம் என்ற பொருள் என்றாலும், இவ்வாயுவின் நிறம் தண்ணிரின் நிறத்தை போன்றதாகும். எஃகு உருளைகளில் சேகரிக்கப்பட்டு பிலவ் வாயு தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. செயற்கை முறையில் உருவாக்கப்படும் வாயுக்களில் பிலவ் வாயுவே அதிகமான அலகு ஆற்றலை வெளிப்படுத்துகிறது. நிலக்கரி வாயுவைப் போல இவ்வாயுவில் கார்பன் மோனாக்சைடு கலப்பு கிடையாது.

ஓளிக்காகவும் வெப்பத்திற்காகவும் பிலவ் எரிவாயு எரிக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருப்பூர்திப் பெட்டிகளிலும் அடுப்புகளிலும் சற்றுத் தூய்மைக் குறைவான பிண்ட்சு எரிவாயு பயன்படுத்தப்பட்டது. எல்.இசட் கிராப் செப்பலின் என்ற வான்கப்பலுக்கு மிதக்கும் திறனை ஈடுசெய்யும் எரிவாயுவாக பிலவ் எரிவாயு பிரபலமடைந்திருந்தது [5]. பிலவ் எரிவாயுவில் 50% ஆல்க்கீன்களும், மீத்தேனும் பிற ஆல்க்கேன்களும் சேர்ந்து 37 சதவீதமும், ஆறு சதவீதம் ஐதரசன் வாயுவும் எஞ்சியிருக்கும் அளவு காற்றும் கலந்துள்ளன. மேலும், இவ்வெரி வாயுவின் எரிதல் வெப்பம் 122 மெகாயூல்/மீட்டர்3 ஆகும் [3].

மேற்கோள்கள்

தொகு
  1. John Bonner; George William Curtis; Henry Mills Alden; Samuel Stillman Conant; John Foord; Montgomery Schuyler; John Kendrick Bangs; Richard Harding Davis; Carl Schurz; George Brinton McClellan Harvey; Henry Loomis Nelson; Norman Hapgood (1908). Harper's weekly. Harper's Magazine Co. பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.
  2. Chamber of Commerce journal of Maine. 1913. பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.
  3. 3.0 3.1 http://chestofbooks.com/crafts/metal/Welding-Cutting/Blau-Gas.html
  4. Teed, P. L. (1931). "Gas Fuels for Airships: The Manufacture of Blau Gas, with Details of Some Possible Alternatives". Aircraft Engineering and Aerospace Technology 3 (2): 41–42. doi:10.1108/eb029368. 
  5. "Graf Zeppelin site". Archived from the original on 2006-08-25. பார்க்கப்பட்ட நாள் 2016-09-14.

இவற்றையும் காண்க

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலவ்_வாயு&oldid=3563709" இலிருந்து மீள்விக்கப்பட்டது