பிலாவலி ஏரி
பிலாவலி ஏரி (Bilawali Lake) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இந்தூர்-கண்ட்வா சாலையில் (இந்தூர்-இச்சாபூர் மாநில நெடுஞ்சாலை) அமைந்துள்ளது. ஏரியின் மொத்த பரப்பளவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி 400 எக்டேர் (சுமார் 4 சதுர கிலோமீட்டர்) ஆகும். பிலாவலி ஏரி இந்தூர் மாநகராட்சி ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும். [1]
பிலாவலி ஏரி Bilawali Lake | |
---|---|
அமைவிடம் | இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 22°38′N 75°50′E / 22.633°N 75.833°E |
முதன்மை வரத்து | இலிம்போதி ஏரியிலிருந்து உள்வரும் கால்வாய் |
முதன்மை வெளியேற்றம் | ஒழுங்குபடுத்தப்பட்ட, சோட்டா பிலாவலி ஏரியை நோக்கி ஒரு கால்வாய் |
வடிநிலப் பரப்பு | 4 சதுர கிலோமீட்டர்கள் (1.5 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 2–2.5 சதுர கிலோமீட்டர்கள் (0.77–0.97 sq mi) |
சராசரி ஆழம் | 9.14 மீட்டர்கள் (30.0 அடி) |
அதிகபட்ச ஆழம் | 10 m (33 அடி) |
உறைவு | இல்லை |
Islands | ஒன்று |
குடியேற்றங்கள் | இந்தோர் |
வரலாறு
தொகுபிலாவலி ஏரி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தூர் மாநிலத்தின் ஓல்கர்களால் உருவாக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் இந்த ஏரியின் வயது 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. [2] [3] இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் அரண்மனை வீடுகள் அழிந்த பிறகு, ஏரியைச் சுற்றி மதத் தளங்கள் காளான்களாக வளரத் தொடங்கின, மேலும் பல ஆண்டுகளாக அதன் அருகில் வசிக்கும் மக்களால் அது ஆக்கிரமிக்கப்பட்டது. மீன்பிடித்தல், வேட்டையாடுதல், மாடு மேய்த்தல், கழிவுகளை கொட்டுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் ஏரியின் சூழலியலை கிட்டத்தட்ட அழித்துவிட்டன.
சுற்றுலா
தொகுஅமைதியான அலைகளுக்கு மத்தியில் தரமான நேரத்தை செலவிட விரும்பும் சுற்றுலாப் பயணிகளால் இந்த ஏரி நிரம்பி வழிகிறது. படகு வலித்தல் & பனி படகு தொடர்பான விளையாட்டு அரங்கத்தின் மேம்பாடு நடந்து வருகிறது, மேலும் இவ்வரங்கை நீர்-விளையாட்டு & சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்களும் உள்ளன. [4]
மீன்பிடித்தல்
தொகுஏரியில் மீன்பிடி நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. மீன்வளத் திணைக்களத்தினால் மீன் அறுவடையும் செய்யப்படுகிறது. [5]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bureau, FPJ (31 May 2019). "Bilawali Lake: Oasis in midst of city’s concrete jungle" (in English). Indore: freepressjournal.in. https://www.freepressjournal.in/cmcm/bilawali-lake-oasis-in-midst-of-citys-concrete-jungle.
- ↑ HT Correspondent, Vinit. "Indore’s Bilawali tank turns 100" (in English). Indore: hindustantimes.com. https://www.hindustantimes.com/indore/indore-s-bilawali-tank-turns-100/story-wwlk8gdtleagYNe3IMXMXP.html.
- ↑ "Bilawali lake turns 100, IMC plans celebration" (in English). Indore: timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/city/indore/bilawali-lake-turns-100-imc-plans-celebration/articleshow/54455923.cms.
- ↑ "Bilawali will be developed as a major tourist spot: Min" (in English). TNN. Indore: timesofindia.indiatimes.com. 18 Nov 2019. https://timesofindia.indiatimes.com/city/indore/bilawali-will-be-developed-as-a-major-tourist-spot-min/articleshow/72099811.cms.
- ↑ Choukse, Sagar (2 Dec 2017). "Bilawali Lake gets its fish back after four months" (in English). TNN. Indore: timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/city/indore/bilawali-lake-gets-its-fish-back-after-four-months/articleshow/61893316.cms.