பில்லி லீ டர்னர்

அமெரிக்க தாவரவியலாளர்

பில்லி லீ டர்னர் (Billie Lee Turner) என்பவர் ஓர் அமெரிக்க தாவரவியலாளரும், புவியியலாளர் இரண்டாம் பில்லி லீ டர்னரின் தந்தையுமாவார். 1925 ஆம் ஆண்டு டெக்சாசிலுள்ள யோவாகும் நகரத்தில் இவர் பிறந்தார். அமெரிக்காவின் டெக்சாசு பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்றிய இவர் தாவரவியல் ஆராய்ச்சி திட்டம் மற்றும் உலர் தாவரத் தொகுப்பு போன்றவற்றையும் இயக்கியுள்ளார்.

ஆராய்ச்சிதொகு

பில்லி லீ டர்னரின் முக்கிய ஆர்வம் விதைதாவரங்கள் தொடர்புடையதாக இருந்தது. [1] மெக்சிகோ நாட்டுத் தாவரங்களில் இவர் விரிவாக பணியாற்றினார். இருபுற வெடிகனி வகைகள் மீது அதிகக் கவனம் செலுத்தினார். இவரது நினைவாக பெயரிடப்பட்ட தாவரங்களில் லோபோசுபெர்மம் டர்னெரி என்ற தாவரமும் அடங்கும். [2] லீ டர்னரின் கடைசி ஆராய்ச்சி கட்டுரை 2010 ஆம் ஆண்டு வெளியானது. [3]

தாவரவியல் பெயரை மேற்கோள் காட்டும்போது பில்லி லீ டர்னரை ஆசிரியராகக் குறிக்க நிலையான எழுத்தாளர் சுருக்கமாக பி.எல்.டர்னர் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. International Plant Names Index: Billie Lee Turner (1925)
  2. Elisens, Wayne J. (1985), "Monograph of the Maurandyinae (Scrophulariaceae-Antirrhineae)", Systematic Botany Monographs, 5: 1–97, doi:10.2307/25027602, JSTOR 25027602
  3. Mark W. Bierner and Billie L. Turner. 2010. Transfer of HYMENOXYS ARGENTEA var.THOREAUENSIS to TETRANEURIS (ASTERACEAE:HELENIEAE:TETRANEURIDINAE). Lundella 13:1–2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_லீ_டர்னர்&oldid=2978587" இருந்து மீள்விக்கப்பட்டது