பில் இலியர்

பில் இலியர் (Bill Hillier) இலண்டன் பல்கலைக்கழகத்தில், கட்டிடக்கலை மற்றும் நகர உருவவியல் துறைப் பேராசிரியர். இவர் பட்டப்படிப்புக்கான பார்ட்லெட் பள்ளியின் தலைவராகவும், இலண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியின் வெளித் தொடரமைப்பு ஆய்வகத்தின் (Space Syntax Laboratory) இயக்குநர் ஆகவும் உள்ளார். கட்டிடங்கள், நகரங்கள் போன்றவற்றில் வெளிசார் கோல அமைப்புக்கள் தொடர்பிலான பகுப்பாய்வு முறைகளை அறிமுகம் செய்த முன்னோடி இவரே ஆவார். இது தொடர்பான கோட்பாடும், கருவிகளும், வழிமுறைகளும் ஒருங்கே வெளித் தொடரமைப்பு (Space Syntax) என அழைக்கப்படுகின்றது.

இவர், ஜூலியேன் ஆன்சன் என்பவருடன் சேர்ந்து "வெளியின் சமுதாய ஏரணம்" (Social Logic of Space)[1] என்னும் நூலை எழுதினார். வெளித் தொடரமைப்பு தொடர்பான அடிப்படைகளை இலியர் இந் நூலில் விளக்கியுள்ளார். இது தவிர, 1996 ஆம் ஆண்டில் வெளித் தொடரமைப்புக் கோட்பாட்டின் பிந்திய வளர்ச்சிகளையும், அது தொடர்பிலான பிற்கால ஆய்வுகளையும் உள்ளடக்கி "வெளியே இயந்திரம்" (Space is the Machine)[2] என்னும் விரிவான நூலொன்றையும் எழுதியுள்ளார். இவற்றுடன், வெளி தொடர்பிலும், வெளித் தொடரமைப்பு, கட்டிடக்கலைக் கோட்பாடு என்பவ்ன தொடர்பிலும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Hillier, Bill., and Hanson, Julienne., Social Logic of Space", Cambridge University Press, 1984.
  2. Hillier, Bill., Space is the Machine", Cambridge University Press, 1996.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_இலியர்&oldid=4161082" இலிருந்து மீள்விக்கப்பட்டது