பில் உட்ஃபுல்

துடுப்பாட்டக்காரர்

வில்லியம் மல்டன் உட்புல் (William Maldon Woodfull OBE (22 ஆகஸ்ட், 1897 – 11 ஆகஸ்ட், 1965) என்பவர் ஒரு முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 1920 முதல் 1930 ஆம் ஆண்டுகளுக்கான ஆத்திரேலிய அணியில் இடம்பிடித்தவர். இவர் விக்டோரியா துடுப்பாட்ட அணி மற்றும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். துவக்க வீரராக களம் இறங்கிய இவர் தனது சக வீரர்களிடம் கனிவாக நடந்துகொள்ளும் முறைக்காகவும் சிறப்பாக எதிரணிக்கு எதிராக எடுக்கும் முடிவுகளுக்காகவும் பரவலாக அறியப்பட்டார். விக்டோரியன் பில் போன்ஸ்ஃபோர்ட் உடன் இணைந்து துவக்க வீரராக கள் இறங்கினார். விக்டோரியா மற்றும் தேசிய அணி ஆகிய இரு அணிகளிளும் இவர்கள் துவக்க வீரர்களாக கள்ம் இறங்கினார்கள். ஆத்திரேலியாவின் மிகச் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக இவர்கள் அறியப்பட்டனர்.

தனது சிறுவயது முதலே இவர் துடுப்பாட்டம் விளையாடத் துவங்கினார். இவருக்கு 19 வயதாக இருக்கும் போது மெல்போர்ன் மாகாணத் துடுப்பாட்ட அணிக்காக முதலில் தொழில்முறை துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். இருபத்து நான்கு வயதாக இருக்கும் போது விக்டோரியா துடுப்பாட்ட அணிக்காக 1921-22 ஆம் ஆண்டில் விளையாடினார். தனது இரண்டாவது போட்டியில் நூறு ஓட்டங்களை அடித்ததன் மூலம் இவர் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் அனைத்துப் போட்டிகளிலும் துவக்க வீரராகவே களம் இறங்கினார். 1925 முதல் 1926 ஆம் ஆண்டிற்கான போட்டிகளில் இவர் மூன்று நூறு ஓட்டங்களை அடித்தார். அதில் ஒரு போட்டியில் எடுத்த 236 ஓட்டங்களும் அடங்கும். இவரின் சிறப்பான ஆட்டத் திறனால் இவர் 1926 ஆம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டிக்குத் தேர்வானார். அந்தத் தொடரின் இறுதியாகத் தேர்வான வீரர் இவரே. இருந்தபோதிலும் அந்தத் தொடரின் முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இருநூறும் இரண்டாம் ஆட்டப் பகுதியில் நூரு ஓட்டங்களும் அடித்தார். அந்தத் தொடரில் அவர் எட்டு நூறு ஓட்டங்களை அடித்தார். அந்த ஆண்டில் வெளியான விசுடன் நாட்குறிப்பில் ஐந்து வீரர்களில் ஒருவராக இவர் தேர்வானார்.

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு

இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் இறுதி வீரராகத் தேர்வான போதிலும் அந்தத் தொடரில் இவர் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார்.[1] அந்தத் தொடரின் பயிற்சி ஆட்டத்தின் போது லீடனில் நடைபெற்ற எசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 201 ஓட்டங்களும் ஓவலில் சர்ரே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 118 ஓட்டங்களும் எடுத்தார்.[2] இருநூறு ஓட்டங்களை அவர் நான்குமணி நேரத்திலேயே எடுத்தார். அந்தத் தொடரில் இருநூறு அடித்த ஒரே ஆத்திரேலிய வீரர் இவர் தான்.[3] அந்தத் தொடரில் 1809 ஓட்டங்களை 58.35 எனும் சராசரியில் எடுத்தார்.[4][5][6] மேலும் மெரிலபோன் துடுப்பாட்ட சங்க அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனார். இருந்தபோதிலும் கேம்பிரிட்ஜ் அணிக்கு எதிராக 98 ஓட்டங்களும், இங்கிலாந்து தெற்கு அணிக்கு எதிராக 69 ஓட்டங்களும் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக நூறு ஓட்டங்களும் எடுத்து மொத்தமாக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 653 ஓட்டங்களை 59.36 எனும் சராசரியோடு தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற போட்டியில் இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.ஆனால் அந்தப் போட்டி மழையால் ரத்தானது.

சான்றுகள்

தொகு
  1. Pollard, Jack (1988). Australian Cricket:The Game and the Players. Sydney: Angus & Robertson. pp. 1131–1132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-207-15269-1.
  2. Robinson, p. 159.
  3. Harte and Whimpress, p. 299.
  4. Cashman et al., pp. 322–323.
  5. "Wisden 1927 – Bill Woodfull". Wisden. 1927. பார்க்கப்பட்ட நாள் 24 May 2007.
  6. Haigh, Gideon. "Players and Officials:Bill Woodfull". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 May 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_உட்ஃபுல்&oldid=3986773" இலிருந்து மீள்விக்கப்பட்டது