பில் பிரவுண்

1912 இல் பிறந்த ஆத்திரேலிய துடுப்பாட்டக்காரர்

வில்லியம் ஆல்பிரடு பிரவுண் (William Alfred Brown, சூலை 31, 1912- மார்ச் 16, 2008 ) ஓர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீர ஆவார். இவர் 1934 முதல் 1948 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டங்களில் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளைடாடியுள்ளார். மேலும் ஒரு போட்டியில் தலைவராகவும் இருந்துள்ளார்.  வலதுகை மட்டையாளரான இவர் 1930 களில் ஜேக் ஃபிங்கிள்டன் என்பவருடன் துவக்க வீரராகக் களம் இறங்கினார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் அப்போதைய சிறந்த இணையாக இவர்கள் கருதப்பட்டனர். இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் டான் பிராட்மேனின் இன்விசிபிள்ஸ் எனும் குழுவில் இவர் உறுப்பினரானார்.

துவக்கத்தில் வேலை மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டிலும் தடுமாறினார்.  1932-33 ஆம் ஆண்டில் தனது முதல் போட்டியில் விளையாடினார். நியூ சவுத் வேல்சு அணிக்காக இவர் முதல் தரத் துடுப்பாட்டப்  போட்டிகளில் அரிமுகமானார். பின் 1934 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணாம் செய்து விளாஇயாடியது. அந்தத் தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  அந்தத் தொடரின் முடிவில் நீண்ட நாட்களாக துவக்க வீரர்களாக களம் இறங்கிய பில் போன்ஸ்ஃபோர்ட் மற்றும் பில் உட்புல் ஆகியோர் ஓய்வு பெற்ற பின்பு இவர், ஜேக் ஃபிங்கிள்டனுடன் இணைந்து துவக்க வீரராக கள்ம் இறங்கினர். பின் சிறப்பாக விளையாடாமல் இருந்த போதும் இவர் 1938 ஆம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தேர்வானது சர்ச்சையானது. ஆனால் அந்தத் தொடரில் 1,854 ஓட்டங்கள் எடுத்தார். அதில் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 206 ஓட்டங்கள் எடுத்து அணியினை தோல்வியில் இருந்து மீளச் செய்தார். மேலும் அந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஐந்து விசுடன் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகத் தேர்வானார்.

தனது ஓய்விற்குப் பிறகு தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பணியாற்றினார்.  மேலும் தானுந்துகளை விற்பனை செய்வது விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்வது போன்ற பணிகளைச் செய்து வந்தார். 2000 ஆம் ஆண்டில் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரின் சேவைகளைப் பாராட்டி ஆர்டர் ஆஃப் ஆஸ்டதிரேலியா எனும் பதக்கம் வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் இவர் காலமான போது மூத்த தேர்வுத் துடுப்பாட்ட வீரராக இருந்தார்.

போருக்கு முன்

தொகு

நவம்பர் 11, 1932 இல் குயீசுலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் செஃபீல்டு ஷீல்டு அணிக்காக தனது முதலாவது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். ஏக் ஃபிங்கிள்டன் என்பவருடன் இவர் துவக்க வீரராக களம் இறங்கிய முதல் போட்டியில் பந்துகளைச் சந்திக்காமல்  ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.[1] அந்தப் போட்டியில் செஃபீல்டு ஷீல்டு அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 274 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[2] தென் ஆத்திரேலிய அணிக்கு எதிரான் போட்டியில் 79 ஓட்டங்களும் டக்ளஸ் ஜர்டைன்ஸ் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 69 ஓட்டங்களும் எடுத்ததே இவரின் போருக்கு முந்தைய துடுப்பாட்ட வாழ்க்கயின் சிறப்பான ஓட்டங்களாகும்.

நவம்பர் 1933 இல் பிரிசுபேனில் நடைபெற்ற குயீன்சிலாந்திற்கு எதிரான அடுத்த தொடரில் டான் பிராட்மனுடன் இனைந்து 294 ஓட்டங்களை எடுத்தார். அதில் இவர் மட்டும் 154 ஓட்டங்களை எடுத்தார்.  மூன்று மணி நேரத்தில் இவர்கள் 294 ஓட்டங்களை எடுத்தனர். இந்தப் போட்டியில் நான்கு இலக்குகளை இழந்து 494 ஓட்டங்களை எடுத்து டிக்ளேர் செய்து ஒரு ஆட்டப்பகுதியால் வெற்றி பெற்றது. விடோரியா அணிக்கு எதிராக 205 ஓட்டங்கள் எடுத்தார்.

சான்றுகள்

தொகு
  1. Cashman, p. 67.
  2. "Player Oracle WA Brown". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 14 May 2009.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_பிரவுண்&oldid=3986775" இலிருந்து மீள்விக்கப்பட்டது