பில் போன்ஸ்போர்ட்

துடுப்பாட்டக்காரர்

வில்லியம் ஹரால்டு "பில்" போன்ஸ் ஃபோர்ட் (William Harold "Bill" Ponsford MBE (19 அக்டோபர்,1900 – 6 ஏப்ரல்,1991) என்பவர் ஓர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். பெரும்பாலும் பில் உட்புல்லுடன் இணைந்து துவக்க வீரரகளாக களம் இறங்கினார்.இவர்கள் விக்டோரியா துடுப்பாட்ட அணி மற்றும் ஆத்திரேலியா அணிகளின் வெற்றிகரமான துவக்க வீரரகளாக கருதப்படுகிறார்கள். இவரின் நண்பரான பில் உட்புல் மாநில மற்றும் தேசிய அணியின் தலைவராக இருந்தவர் ஆவார். முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இரு முறை அதிக பட்ச தனிநபர் ஓட்டங்களை எடுத்தவர் எனும் சாதனை படைத்தார். இவரும் பிறையன் லாரா ஆகிய இருவர் மட்டுமே ஒரு ஆட்டப் பகுதியில் நானூறு ஓட்டங்களை எடுத்தவர்கள் ஆவர். 1934 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில்டான் பிராட்மனுடன் இணைந்து இவர் இரண்டாவது இணைக்கு 451 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் 2 ஆவது இணைக்கு அதிக பட்ச ஓட்டங்களெடுத்த ஆத்திரேலிய இணை எனும் சாதனை படைத்தார். இவரின் பல தனிப்பட்ட சாதனைகளை டான் பிராட்மன் முறியடித்தார். டான் பிராட்மனுடன் இணைந்து இவர் இரண்டாவது இணைக்கு 451 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அயல்நாட்டில் அனைத்து வடிவ துடுப்பாட்ட போட்டிகளில் இரண்டாவது இணைக்கு அதிக பட்ச ஓட்டங்களெடுத்த இணை எனும் சாதனை படைத்தது.[1]

மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மற்றவர்களின் மட்டையினை விட இவரின் மட்டையின் எடை சற்று அதிகமாக இருக்கும். இதனால் இவர் பிக் பெர்தா எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்டார். ஆனால் 1932-33 ஆம் ஆண்டுகளுக்கான இடையில் நடைபெற்ற போட்டிகளில் இவர் வேகப் பந்துவீச்சிற்கு எதிராக சரியாக விளையாடவில்லை என விம்ர்சனம் எழுந்தது. இவர் துடுப்பாட்டம் மட்டுமல்லாது மாநில பேஸ்பால் அணியிலும் விளையாடினார். இது அவரின் துடுப்பாட்ட திறனை வளர்த்துக் கொள்ள உதவியது.[2]

சற்று கூச்ச சுபாவம் கொண்ட வீரரான இவர் ஓய்விற்குப் பிறகு பொதுமக்களைச் சந்திப்பதனைத் தவிர்த்தார். இவர் மெல்போர்ன் துடுப்பாட்ட சங்கத்தில் சுமார் முப்பது ஆண்டுகள் விளையாடிய்டுள்ளார். 1981 ஆம் ஆண்டில் இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தின் மேற்கு மாடத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் அந்த மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றது. அப்போது இவரின் உருவச் சிலை அங்கு வைக்கப்பட்டது.[3] ஆத்திரேலியாவின் முதலாம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முதல் பத்து ஹால் ஆஃப் பேமாக அறிவிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

தேர்வுத் துடுப்பாட்டம் தொகு

1924-25 ஆம் ஆண்டுகளில் இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் ஆத்திரேலிய லெவன் அணி சாஅர்பாக விளையாடி 81 ஓட்டங்களும் விக்டோரியா அணிக்காக தென் ஆத்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 166 ஓட்டங்களும் எடுத்ததன் மூலம் இவர் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் தேர்வானார்[4] முதல் போட்டியில் இவர் ஆத்திரேலிய அணியின் தலைவரான ஹெர்பி காலின்சுடன் இணைந்து மூன்றாவது வீரராகக் கள் இறங்கினார்.

சான்றுகள் தொகு

  1. "Partnership records | Test matches | Cricinfo Statsguru". ESPNcricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=1;home_or_away=2;template=results;type=fow;view=innings. 
  2. As a convention, cricket seasons are denoted as a single year to represent northern hemisphere summer, or dashed for southern hemisphere. See Cricket season for more information.
  3. "Grandstands at the MCG". Melbourne Cricket Club. Melbourne Cricket Club. 2009. பார்க்கப்பட்ட நாள் 5 February 2011.
  4. Leckey (2006), p. 47.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_போன்ஸ்போர்ட்&oldid=3448429" இலிருந்து மீள்விக்கப்பட்டது