பிளஃப் தீவு (அந்தமான்)

பிளஃப் தீவு (Bluff Island) என்பது அந்தமான் தீவில் உள்ள ஒரு சிறிய தீவாகும். 500-600 மீ அகலம் கொண்ட குறுகிய கால்வாய்கள் இத்தீவை மேற்கில் சிபைக் தீவிலிருந்தும், தெற்கில் தெற்கு அந்தமானிலிருந்தும் பிரிக்கின்றன. இத்தீவின் பரப்பளவு 1.14 கி.மீ2 [1]ஆகும். இத்தீவு இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியாக உள்ளது.

1949 ஆம் ஆண்டில் எஞ்சியிருந்த அந்தமான் தீவுக்கூட்டத்தின் சில பழங்குடிமக்களை நோய்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க இத்தீவுக்கு இடம் மாற்றப்பட்டனர். 1961 ஆம் ஆண்டில் அவர்கள் எண்ணிக்கையானது 19 நபர்கள் என்ற மிகக்குறைவான அளவை எட்டியிருந்தது. 1969 ஆம் ஆண்டில் அவர்களை பிளஃப் தீவைவிட சற்றுப் பெரிய சிட்ரெய்ட் தீவுக்கு மீண்டும் இடம் மாற்றினர்.[2] 1987 ஆம் ஆண்டில் பிளஃப் தீவு ஒர் இயற்கைப் பாதுகாப்பகமாக மாறியது.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளஃப்_தீவு_(அந்தமான்)&oldid=3791874" இலிருந்து மீள்விக்கப்பட்டது