பிளாங்க் நேரம்
காலத்தை அளவிடும் ஒரு அலகு
இயற்பியலில் பிளாங்க் நேரம் (Planck time) என்பது பிளாங்க் அலகுகளில் காலத்தின் அலகு ஆகும். ஒரு பிளாங்க் நேரம் என்பது வெற்றிடத்தில் ஒளி ஒரு பிளாங்க் தொலைவு கடக்க ஆகும் நேரம் ஆகும்.[1] இது tP என்று குறிக்கப்படுகிறது. அறிவியலாளர் மாக்ஸ் பிளாங்க் இதனை முதலில் முன்மொழிந்தார்.[1]
இதன் கணிதவியல் வரையறை:
tP - பிளாங்க் நேரம்
- குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி
G - ஈர்ப்பு மாறிலி
c - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்
s - SI அலகு முறையில் காலத்தின் அலகு (நொடி)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Big Bang models back to Planck time". Georgia State University. 19 June 2005.
- ↑ CODATA Value: Planck Time – The NIST Reference on Constants, Units, and Uncertainty.