பிளாடைட்டு

சல்பேட்டு கனிமம்

பிளாடைட்டு (Blödite) என்பது Na2Mg(SO4)2·4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரேறிய சோடியம் மக்னீசியம் சல்பேட்டு கனிமமாக இது கருதப்படுகிறது. கனிமமானது மஞ்சள் நிறத்தில் தெளிவாக உள்ளது. பெரும்பாலும் மாசுகள் சேர்வதால் கருமையாகிறது. ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் படிகங்களாக உருவாகிறது.

பிளாடைட்டு
Blödite
கலிபோர்னியாவின் சோடா ஏரியில் கிடைத்த பிளாடைட்டு கனிமம் (அளவு: 7.0 × 4.8 × 1.9 செ.மீ)
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNa2Mg(SO4)2·4H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது. மாசுக்கள் சேர்வதால் மஞ்சள், அடர்சாம்பல்,நீலப்பச்சை அல்லது சிவப்பு
படிக இயல்புபட்டகம் முதல் சமமான படிகங்கள், சிறுமணி, பெரியது
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2.5–3
மிளிர்வுபளபளக்கும்
ஒப்படர்த்தி2.23
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.483, nβ = 1.486, nγ = 1.487
இரட்டை ஒளிவிலகல்δ = 0.004
2V கோணம்71° (அளக்கப்பட்டது)
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியம் சங்கம் பிளாடைட்டு கனிமத்தை Blö[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பிளாடைட்டு முதன்முதலில் 1821 ஆம் ஆண்டில் ஆத்திரிய நாட்டின் குமுந்தன் மாவட்டத்தில் பேடு இசுசில் நகரத்தில் இருந்த உப்பு படிவுகளில் கண்டறியப்பட்டது. செருமன் நாட்டின் கனிமவியலாளரும் வேதியியலாளருமான கார்ல் ஆகசுட் பிளாட்டு (1773-1820) நினைவாக கனிமத்திற்கு பிளாடைட்டு எனப் பெயரிடப்பட்டது.[2][3]

உலகளவில் கிரேட் உப்பு ஏரி, உட்டா போன்ற ஆவியாதல் வண்டல் சூழல்களில் காணப்படுகிறது.

சோடா ஏரியில் கிடைத்த பிளாடைட்டு படிகம் (அளவு: 2.9 × 2.2 × 1.4 செ.மீ)

மேற்கோள்கள்

தொகு
  1. Handbook of Mineralogy
  2. 2.0 2.1 Blödite on Mindat.org
  3. 3.0 3.1 Blödite data on Webmineral
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாடைட்டு&oldid=4145071" இலிருந்து மீள்விக்கப்பட்டது