பிளாவ்னாயிட்டு
நீரேற்ற யுரேனைல் சல்பேட்டு கனிமம்
பிளாவ்னாயிட்டு (Plavnoite) என்பது K0.8Mn0.6[(UO2)2O2(SO4)]•3.5H2O என்ற வேதி வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரியவகை யுரேனியம் சல்பேட்டு அணைவுக் கனிமம் என்றும் இரண்டாம் நிலை யுரேனியக் கனிமம் என்றும் இது வகைப்படுத்தப்படுகிறது. பிளாவ்னாயிட்டில் யுரேனைல் குழுக்கள் இடம்பெற்றுள்ளன. செக்குடியரசில் உள்ள யாச்சிமோவ் நகரத்தின் பிளாவ்னோ சுரங்கத்தில் இக்கனிமம் கண்டறியப்பட்டது [1][2]. இச்சுரங்கம் பல அரிய கனிமங்களுக்கும் தனித்தன்மையான சில கனிமங்களுக்கும் பிறப்பிடமாக கருதப்படுகிறது [3].
பிளாவ்னாயிட்டு Plavnoite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டு |
வேதி வாய்பாடு | K0.8Mn0.6[(UO2)2O2(SO4)]•3.5H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
மேற்கோள்கள் | [1] |
சிப்பெய்ட்டு [1] கனிமத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும் பிளாவ்னாயிட்டு தனித்தன்மை மிக்கதொரு கனிமமாகும் [4].
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பிளாவ்னாயிட்டு கனிமத்தை Pvn[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Plášil, J., Škácha, P., Škoda, R., Kampf, A.R., Sejkora, J., Čejka, J., Hloušek, J., Kasatkin, A.V., Pavlíček, R., and Babka, K., 2015. Plavnoite, IMA 2015-059. CNMNC Newsletter No. 27, October 2015, 1229; Mineralogical Magazine 79, 1229–1236
- ↑ "Plavnoite: Plavnoite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ "Jáchymov District (St Joachimsthal), Krušné Hory Mts (Erzgebirge), Karlovy Vary Region, Bohemia (Böhmen; Boehmen), Czech Republic - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ "Plavnoite: Plavnoite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.