பிளேட்டோவின் சீர்திண்மங்கள்

வடிவவியலில் பிளேட்டோவின் சீர்திண்மங்கள் என்பவை ஐந்து இயல்பான திண்ம வடிவங்கள் ஆகும். எல்லா பக்கங்களும் ஒரே அளவாயும் எல்லா கோணங்களும் ஒரே அளவாயும் உள்ள தட்டையான (இரு பரிமாண) சீர் பல்கோண வடிவங்களைக் கொண்டு அமைக்கப்படும் குவிந்த அடைபட்ட திண்ம வடிவங்கள் ஐந்தே ஐந்து என்று நிறுவியுள்ளார்கள். இவைகளுக்கு பிளேட்டோவின் சீர்திண்மங்கள் என்று பெயர். அவையாவன நான்முக முக்கோணகம், அறுமுக கட்டகம், எண்முக முக்கோணகம், பன்னிரண்டுமுக ஐங்கோணகம், இருபதுமுக முக்கோணகம் ஆகும்.

நான்முக முக்கோணகம் அறுமுக கட்டகம்
அல்லது கனசதுரம்
எண்முக முக்கோணகம் பன்னிரண்டுமுக ஐங்கோணகம் இருபதுமுக முக்கோணகம்

(சுழலும்படம்)


(சுழலும்படம்)


(சுழலும்படம்)


(சுழலும்படம்)


(சுழலும்படம்)