பிள்ளையார் பந்து
பிள்ளையார் பந்து ஒரு சிறுவர் விளையாட்டு.
ஆடும் முறை
தொகுசுவர் ஓரமாக ஒரு செங்கல் நிறுத்தப்படும். செங்கல் எவ்வளவு நீளம் இருக்கிறதோ அவ்வளவு நீளம் சுவரிலிருந்து தள்ளி அந்தச் செங்கல் நிறுத்தப்படும். அந்தச் செங்கல்தான் பிள்ளையார். உத்திக் கோட்டில் நின்று துணிப்பந்தால் பிள்ளையாரை வீழ்த்த வேண்டும்.
இதுதான் விளையாட்டு. இதில் பல விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். இரண்டு அணியாகப் பிரிந்து ஆடுவர்.
- பிள்ளையார் வீழ்ந்ததும் எதிர் அணியினர் ஓடுவர்.
- பிள்ளையாரை வீழ்த்திய அணியினர் நெருக்கமாக வட்டமாக நின்று ஒருவரிடம் பந்தைக் கொடுப்பர்.
- பின்னர் எல்லாரும் அவரவர் கையில் பந்து உள்ளது போல் நடித்துக்கொண்டு எதிரணியினரை அடிக்க ஓடுவர்.
- அடிபட்டவர் ஆட்டத்திலிருந்து விலக வேண்டும்.
- கையில் பந்து இல்லாதவர் எனத் தெரிந்து எதிரணியினர் பிடித்துவிட்டால் அவரும் ஆட்டத்திலிருந்து விலகவேண்டும்.
- சுவரில் பட்ட பந்து திரும்பிவந்து பிள்ளையாரை வீழ்த்தினால் சேர்ப்பு இல்லை. அது பிரண்டை என்று சொல்லி விலக்கப்படும்.
- பிள்ளையார்மீது பட்டுப் பிள்ளையாரை வீழ்த்தாமல் திரும்பி வரும் பந்தை மட்டை என்பர்.
- மட்டையாக வரும் பந்தை எடுப்பவர் எந்த அணியினராக இருந்தாலும் அவர் அடுத்து அடிக்கலாம்.
எந்த அணியிலுள்ளவர் எல்லாரும் வெளியேறுகிறார்களோ அந்த அணி தோற்ற அணி ஆகிவிடும்.
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
- கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.