பிஸ்கே விரிகுடா

பிஸ்கே விரிகுடா (Bay of Biscay, /ˈbɪsk, -ki/ (எசுப்பானியம்: Golfo de Vizcaya, பிரெஞ்சு மொழி: Golfe de Gascogne) என்பது வடகிழக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் செல்டிக் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள விரிகுடாவாகும். இது பிரான்சின் மேற்கு கடலோரத்தில் பிரெஸ்ட்டுக்குத் தெற்கிலிருந்து எசுப்பானிய எல்லை வரையிலும், எசுப்பானியாவின் வடக்குக் கடலோரத்தில் ஓர்டெகா முனைக்கு மேற்கு வரையும் பரவியுள்ளது.

பிஸ்கே விரிகுடாவை குறிக்கும் நிலப்படம்.
பிஸ்கே விரிகுடாவை குறிக்கும் நிலப்படம்.

இங்கு சராசரி ஆழம் 1,744 மீட்டர்கள் (5,722 அடி) ஆகும்;மிகவும் ஆழமான பகுதி 4,735 மீட்டர்கள் (15,535 அடி) ஆழத்தில் உள்ளது.[1]

பிஸ்கே விரிகுடாவோரமாக எசுப்பானியக் கடற்கரை

அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியில் மிகவும் மோசமான வானிலை நிலவும் இடங்களில் பிஸ்கே விரிகுடாவும் ஒன்றாகும். இங்கு சூறாவளிகளும் புயல்களும், குறிப்பாக குளிர் காலத்தில், எழுவதுண்டு. அண்மைக்காலம் வரை இங்கு பல கப்பல்கள் புயல்களால் உடைக்கப்பட்டுள்ளன; பலர் உயிரிழந்துள்ளனர். தற்கால நவீன கப்பல்களும் வானிலை அறிக்கைகளும் இச்சூழலை மேம்படுத்தியுள்ளன.

முதன்மை நகரங்கள்

தொகு

பிஸ்கே விரிகுடா ஓரமாக அமைந்துள்ள நகரங்கள்:

மேற்சான்றுகள்

தொகு
  1. "Bay of Biscay".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்கே_விரிகுடா&oldid=1735984" இலிருந்து மீள்விக்கப்பட்டது