இராஜா பர்மால் (Raja Bharmal) (அண். 1498 – 27 சனவரி 1574) மற்றும் பிஹரி மால் அல்லது பக்மால் என்றும் எழைக்கப்படுவர் தற்போதைய இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் அமைந்திருந்த செய்ப்பூர் இராச்சியத்தை ஆண்ட 22 ஆவது இராஜபுத்திர அரசர் ஆவார்.

இவரது மகள், மரியம் உசு-சமானி (ஜோதா பாய் எனப் பரவலாக அறியப்பட்டவர்), 3 ஆவது முகலாயப் பேரரசர் அக்பரின் முதன்மையான வாழ்க்கைத் துணைவரும் 4 ஆவது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் தாயும் ஆவார். முகலாயப் பேரரசின் மிகக் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுள் ஒன்றாக இராஜா பர்மாலின் மகளின் திருமணம் அமைந்தது. இவர் அந்நாளில் தனக்கு அடுத்ததாக ஆட்சிக்கு வந்த பக்வந்த் தாசு மற்றும் இவரது பேரன் மான் சிங் ஆகியோருடன் மிக உயர்வான மன்சப்தார் ஆக இருந்தார். இவர் 1574 ஆம் ஆண்டு ஆக்ராவில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Afzal Husain, The Nobility Under Akbar and Jahāngīr: A Study of Family Groups (1999), p. 90
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஹரி_மால்&oldid=3625462" இலிருந்து மீள்விக்கப்பட்டது