பி. கே. தாவன்

இந்திய அரசியல்வாதி

பி.கே. தாவன் (B. K. Dhaon ) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1901 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று லக்னோ மாவட்டத்தில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ மக்களவைத் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். சந்திரா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு 3 மகன்களும் 4 மகள்களும் பிறந்தனர். 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று தாவன் காலமானார்.[2][3]

பி. கே. தாவன்
B. K. Dhaon
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1962–1967
முன்னையவர்புலின் பிகாரி பானர்ச்சி
பின்னவர்ஆனந்து நாராயண் முல்லா
தொகுதிலக்னோ , உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1901-12-12)12 திசம்பர் 1901
இலக்னோ, பிரித்தானிய இந்தியா (தற்பொழுது உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு26 நவம்பர் 1968(1968-11-26) (அகவை 66) [1]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சந்திரா தாவன்
பிள்ளைகள்3 மகன்கள் மற்றும் 4 மகள்கள்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 131. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
  2. India. Parliament. Lok Sabha (1962). Who's who. Lok Sabha. p. 124. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
  3. Madras (India : State) (October 1962). Fort Saint George Gazette. p. 799. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._தாவன்&oldid=3827028" இலிருந்து மீள்விக்கப்பட்டது