ப. தனபால்

இந்திய அரசியல்வாதி
(பி. தனபால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ப. தனபால் (P. Dhanapal) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவரும் ஆவார்.

ப. தனபால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 16, 1951 (1951-05-16) (அகவை 73)
சேலம், கருப்பூர்
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்கலைச்செல்வி
பிள்ளைகள்லோகேசு தமிழ்ச்செல்வன், திவ்யா

அரசியல் வாழ்க்கை

தொகு

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக

தொகு

2011 ஆம் ஆண்டில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பேரவையின் துணைத் தலைவராகப் பதவி வகித்த இவர் சட்டப்பேரவைத் தலைவர் டி. ஜெயக்குமார் பதவி விலகியதை அடுத்து அக்டோபர் 10, 2012 அன்று தமிழக சட்டப்பேரவையின் 19 ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].

தமிழக அமைச்சராக

தொகு

2001 ஆம் ஆண்டு அரசமைத்த அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.

சட்டமன்ற உறுப்பினராக

தொகு

அதிமுக தொடங்கிய காலத்தில், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் 1951 ஆம் ஆண்டு மே 16, அன்று சேலம் கருப்பூரில் பழனி என்பவருக்கு மகனாக பிறந்தார். சேலம் அரசினர் உயர்நிலைப்பள்ளி, கருப்பூரில் 1968ம் ஆண்டு பள்ளிப்படிப்பையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1975ம் ஆண்டு வரலாற்றில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார் [2]. இவருக்குக் கலைச்செல்வி என்ற மனைவியும், லோகேசு தமிழ்செல்வன் என்கிற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._தனபால்&oldid=3943883" இலிருந்து மீள்விக்கப்பட்டது