ப. மோகன்

இந்திய அரசியல்வாதி
(பி. மோகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ப. மோகன் (P. Mohan) சங்கராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி பெற்றவர் ஆவார். அதிமுக கட்சி தொடங்கியதிலிருந்து இவர் அதன் உறுப்பினராக உள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். 1996, 2006ம் ஆண்டுகளில் சின்னசேலத்தில் போட்டியிட்டு தோற்றார். 2001ம் ஆண்டு சின்னசேலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். 2003ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை இவர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், பின்னர் கூட்டுறவு மற்றும் வனத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 2012 அக்டோபர் அன்று ஊரகத் தொழில்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._மோகன்&oldid=3943885" இலிருந்து மீள்விக்கப்பட்டது