பி. ர. வாசுதேவ ராவ்
பி. ர. வாசுதேவ ராவ் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக பெப்ரவரி 01, 2013 அன்று பொறுப்பேற்றுள்ளார். இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள வேதியியல் குழுமத்தின் இயக்குனராக இதற்கு முன் பணிபுரிந்தார்.
படிப்பு
தொகுஇவர் தன்னுடைய படிப்பை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்லூரியில் 1972 ம் ஆண்டு நிறைவு செய்தார். பின்பு மும்பையில் உள்ள [[பாபா அணு ஆராய்ச்சி மையம் பணிபுரிந்தார். ஆக்டினைடு வேதியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். 1978 ம் ஆண்டு பாபா அணு ஆராய்சசி மையத்தில் பணியிலிருந்து ராஜினாமா செய்தார். இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் கதிரியக்க வேதியியல் ஆய்வக பிரிவில் பணிபுரிந்தார். ஈனுலைகள் தொடர்பான வடிவமைப்பு மற்றும் மேம்பாடு பற்றிய தொழில்நூட்பத்தில் சிறந்து விளங்கினார்.
விருதுகள்
தொகு- 2007 - இந்திய அணு ஆயுத சமூக விருது