பி. வள்ளல்பெருமான்

பி. வள்ளல் பெருமான் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984, 1989 மற்றும் 1991 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக சிதம்பரம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றினார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடன் நெருக்கமானவராக விளங்கினார்.

உடல் நலம் குன்றி சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 28.11.2017 செவ்வாய்க்கிழமை காலை இயற்கை எய்தினார்.[1][2][3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வள்ளல்பெருமான்&oldid=2741600" இருந்து மீள்விக்கப்பட்டது