பி. வா. ஆச்சார்யா

பி. வா. ஆச்சார்யா (B.V. Acharya) இந்தியாவின் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். இவர் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த சிவல்லி மாத்வா பிராமணரான ராமச்சந்திர ஆச்சார்யாவின் மகன் ஆவார். இவர் பல முறை கர்நாடக அரசின் மாநில அரசு தலைமை வழ்க்கறிஞராக இருந்துள்ளார்.[1] 18.12.89 முதல் 21.10.1990 வரையிலும் மீண்டும் 21.11.1992 முதல் 21.12.1994 வரையிலும் இவர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் பணியில் இருந்துள்ளார்.

பி. வா. ஆச்சார்யா
B.V. Acharya
கர்நாடக உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1989
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஉடுப்பி மாவட்டம்

தமிழக முதலமைச்சர் செயலலிதாவுக்கு எதிரான விகிதாசார சொத்துக்கள் வழக்கில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றார். உச்சநீதிமன்றம் செயலலிதா வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியபோது, வழக்கை எதிர்த்துப் போராட ஆச்சார்யாவை தேர்வு செய்தது. இவர் அரசு வழக்கறிஞராக இருந்தார். இங்கு சிறப்பு அரசு வழக்கறிஞராகவும், சிறப்பு ஆலோசகராகவும் ஆச்சார்யா வழக்கைத் தொடர்ந்தார். இன்னல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் அவற்றின் தர்க்கரீதியான முடிவுக்கு வந்தார்.[2][3] 2017 ஆம் ஆண்டில் இந்திய பார் கவுன்சில் மூலம் இந்தியாவின் முதல் பத்து வழக்கறிஞர்களில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Advocate General for Karnataka". advgen.kar.nic.in.
  2. "B.V. Acharya". பார்க்கப்பட்ட நாள் 29 August 2019.
  3. "BV Acharya: The man Jayalalithaa could not silence". The Asian Age. 15 February 2017.
  4. "Bengaluru: Udupi man Dr B V Acharya among top ten lawyers from country". www.daijiworld.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வா._ஆச்சார்யா&oldid=4127146" இலிருந்து மீள்விக்கப்பட்டது