நிலவியலில் பீடபூமி (Plateau) என்பது ஒரு வகையான மேட்டு நிலப்பரப்பைக் குறிக்கும். பொதுவாக கடல் மட்டத்தை விட நன்கு உயரமான சம நிலப்பரப்பு பீடபூமி எனப்படுகிறது.

தக்காணப் பீடபூமியின் அமைவிடம்

உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள திபெத் பீடபூமி "உலகின் கூரை" என கருதப்படுகிறது. இது 25,00,00 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், கடல் மட்டத்திலிருந்து 5000 மீ உயரத்திலும் அமைந்துள்ளது. காலநிலை மாற்றங்கள் பீடபூமியினால் ஏற்படும். உதாரணமாக இந்தியாவின் பருவமழை காலங்களில் வரும் பருவக்காற்றை திசை திருப்பும் அளவிற்கு திபெத் பீடபூமி உயரமானது.

வட அமெரிக்காவின் கொலெராடோ பீடபூமியும் (337,000 ச.கி.மீ ) குறிப்பிடத்தகுந்த பீடபூமியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீடபூமி&oldid=3735138" இலிருந்து மீள்விக்கப்பட்டது