பீடோ (PHAEDO) என்பது சாக்ரட்டீசின் மரணம் பற்றிய ஒரு நூல் ஆகும். சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும். சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரது உடலைப் புதைப்பதா எரிப்பதா என விவாதிக்கப்பட்டது. இறந்த பிறகு உயிரின் நிலை என்ன? எங்கு போகும்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன?

பீடோ என்பவன் சாக்ரட்டீசின் மாணவன் மற்றும் நண்பன் ஆவான். சாக்ரட்டீசு சாகும்போது உடன் இருந்து கண்ணீர் வடித்தவன். இந்த உரையாடல்களை எக்சக்கிரட்டசு என்பவருக்கு எடுத்துச் சொல்வதாக இந்த நூல் உள்ளது. பீடோ என்ற இந்த நூல் என்றி அரிஸ்டிபஸ் என்பவரால் 1160 இல் கிரேக்க மொழியிலிருந்து இலத்தின் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இந்த நூல் சாக்ரட்டீசின் மாணவர் பிளேட்டோவின் பெரும் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

ஆன்மா என்பது அழியாத ஒன்று என்பது சாக்ரட்டீசு பேசிய உரையாடலின் மிகச் சாரமான கருத்து ஆகும். ஏதென்சு நீதி மன்றம் சாக்ரட்டீசுக்கு மரணத் தண்டனை விதித்து சிறைக்கு அவரை அனுப்பியது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடவுள்களை நம்பாமல் இளைஞர்களின் மனத்தைக் கெடுப்பதாக சாக்ரட்டீசு மீது குற்றம் சாற்றப்பட்டு தண்டிக்கப்பட்டார். [1]

உசாத்துணை

தொகு
  1. I. F. Stone is among those who adopt a political view of the trial. See the transcript of an interview given by Stone here: http://law2.umkc.edu/faculty/projects/ftrials/socrates/ifstoneinterview.html. For ancient authority, Stone cites Aeschines (Against Timarchus 173).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீடோ&oldid=2902031" இலிருந்து மீள்விக்கப்பட்டது