பீட்டர் ஆர். லாஸ்ட்

பீட்டர் ராபர்ட் லாஸ்ட்(Peter Robert Last) ஆத்திரேலிய மீனியல் ஆய்வாளர் ஆவார். இவர் ஆத்திரேலிய தேசிய மீன் சேகரிப்பின் கண்காணிப்பாளரும், தாசுமேனியா, ஹோபார்ட்டில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி (சி.எம்.ஏ.ஆர்) நிலையத்தின் மூத்த முதன்மை ஆய்வாளரும் ஆவார்.[1] இவர் குறுத்தெலும்பு மீன் நிபுணர் ஆவர். பல புதிய வகை சுறாமீன்கள் குறித்து விவரித்துள்ளார்.[2]

லாஸ்ட், "ஆத்திரேலியாவின் சுறா மற்றும் கதிர் மீன்கள்" (Sharks and Rays of Australia) எனும் புத்தகத்தின் இணை எழுத்தாளர் ஆவார்.[3] மேலும் இவர் ஆத்திரேலிய ஹேண்ட்மீன்கள் (லோஃபிஃபார்ம்ஸ்: பிராச்சியோனிச்ச்திடே) எனும் புத்தகத்தினை திருத்திய பதிப்பினை எழுதியுள்ளார். இதில் மூன்று புதிய பேரினங்கள், ஒன்பது புதிய இனங்கள் குறித்த விளக்கங்களை இணைத்துள்ளார்.[4] இவருக்கு 2009ஆம் ஆண்டில், ஆத்திரேலிய மீன் உயிரியல் சமூகத்தின் மிக உயரிய விருதான கே. ராட்வே ஆலன் விருது வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Peter R. Last". Harvard University Press. Archived from the original on 29 July 2010.
  2. Ward, Robert D.; Holmes, Bronwyn H.; White, William T.; Last, Peter R. (2008). "DNA barcoding Australasian chondrichthyans: results and potential uses in conservation". Marine and Freshwater Research 59 (1): 57–71. doi:10.1071/MF07148. 
  3. Last, Peter R.; Stevens, John D. (2009). Sharks and Rays of Australia. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-03411-2. {{cite book}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
  4. Last, Peter R.; Gledhill, Daniel C. (2009). A revision of the Australian handfishes (Lophiiformes: Brachionichthyidae), with descriptions of three new genera and nine new species (PDF). (Zootaxa 2252). Auckland, New Zealand: Magnolia Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86977-425-7. Archived (PDF) from the original on 4 December 2010. {{cite book}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
  5. "K. Radway Allen Award". Australian Society for Fish Biology official website. Accessed July 21, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஆர்._லாஸ்ட்&oldid=3026659" இலிருந்து மீள்விக்கப்பட்டது