பீட்டர் துன்சுபி

பீட்டர் துன்சுபி (Peter Dunsby) (பிறப்பு: 12 நவம்பர் 1966) ஓர் ஈர்ப்பு, அண்டவியல் துறையின் பேராசிரியரும் தென் ஆப்பிரிக்காவில் அமைந்த கேப்டவுன் பல்கலைக்கழக கணிதவியல், பயன்முறைக் கணிதவியல் துறையின் துறைத்தலைவரும் ஆவார். இவர் அங்கே 2016 வரை வானியற்பியல், அண்டவியல்,ஈர்ப்பு மையத்தின் இணை இயக்குநராக விளங்கினார்.[1][2]இவர் பன்னாட்டுப் புத்தியற்பியல் இதழ் ஆசிரியக் குழுவிலும் பணிபுரிந்துள்ளார்.[3]

பீட்டர் துன்சுபி
Peter Dunsby
பிறப்பு12 நவம்பர் 1966
துறைஅண்டவியல், ஈர்ப்பு
பணியிடங்கள்கேப்டவுன் பல்கலைக்கழகம், தேசிய வானியற்பியல், விண்வெளி அறிவியல் நிகழ்ச்சிநிரல்
கல்வி கற்ற இடங்கள்இலண்டன், அரசி மேரி பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்மால்கோல்ம் மெக்காலும்
விருதுகள்S2A3 பிரித்தானியக் கழக விருது (2006)
இணையதளம்
peterdunsby.net

துன்சுபி அண்டவியலிலும் ஈர்ப்பியலிலும் பல புலங்களில் விரிவாகக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஈர்ப்பின் உயர் ஒழுங்கு கோட்பாடுகளும் எஃப்(ஆர்) ஈர்ப்பும் அடங்கும்,[4]இவர் தென் ஆப்பிரிக்கத் தேசிய வானியற்பியல், விண்வெளி அறிவியல் திட்டத்தின் உருவாக்க இயக்குநராக இருந்தார்.[5]

தகைமைகளும் விருதுகளும் தொகு

இவருக்கு 2006 இல் தென் ஆப்பிரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகம் கோட்பாட்டு இயற்பியலில் இவர் ஆற்றிய பணிகளுக்காக வெள்ளிப் பதக்கத்தை வழங்கியது. அக்குழு அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு ஆய்வில் இவர் பங்களிப்பையும் அபுள் விதிக் கணக்கீட்டைத் துல்லியப்படுத்திய இவரது வகைமை Ia மீவிண்மீன் வெடிப்பு ஆய்வையும் மிகவும் போற்றிப் பாராட்டியது.[6]

இவருக்கு 2016 இல் தேசிய அறிவியல் தொழில்நுட்பப் பேரவை மனிதவள வளர்ச்சி விருதை வழங்கியது. இது பட்ட மேற்படிப்பு, முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளரின் மேம்பாட்டுக்கு இவர் ஆற்றிய பணிக்காக வழங்கப்பட்டது.[7]

இவர் 2017 அக்தோபரில் கேப்டவுன் பல்கலைக்கழக ஆய்வாளர் கல்லூரிக்குத் தேர்வு செய்யப்பட்டார். [8]

இவர் 2018 மார்ச் 20 இல் திரிபிடு, இலகூன் ஒண்முகில்களுக்கிடையே மிகப் பொலிவான ஒளிக்கடப்பு நிலவியதாக வானியல் நிகழ்வுகளை உடனே தெரிவிக்கும் ஆர்வக் கோளாறால் ஓர் அறிக்கை வெளியிட்டபோது இவர் ஒரு பன்னாட்டுத் தொலைவரிக் கவன ஈர்ப்புக்குள்ளானார்.[9] 40 மணித்துளிகள் கழித்து இவர் தான் கண்ட ஒளிக்கடப்புப் பொருள் செவ்வாய்க் கோள் என இன்ங்காணப் பட்டதாக திருத்தப் பதிவும் வெளியிட்டார்.[10] பிறகு இவர் ஒரு வாரச் செய்தி இதழில் இந்நிகழ்வு குறித்த தனது நேரிய தவறு, ஒளிப்படக் கருவியில் உள்ள பிற தகவல்களைச் சரியாக்க் கவனிக்காததால் ஆர்வக் கோளாறால் நிகழ்ந்து விட்டதென விரிவாக விளக்கி எழுதினார். இதில் பிழையேதும் தொடராத்தால் இதை நினைத்து மெல்ல நகைக்கவேண்டியது தான் என்றார். மேலும் இவர் இது போன்ற மெல்லிய புன்னகை உலகில் அடிக்கடி தேவை தானே என முடித்து வைத்துள்ளார்.”[11]

மேற்கோள்கள் தொகு

  1. Haggard, Kerry. "Reaching for the stars to boost research capacity" (in en). The M&G Online. https://mg.co.za/article/2016-07-01-00-reaching-for-the-stars-to-boost-research-capacity. 
  2. "Prof Peter Dunsby". University of Cape Town. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018.
  3. "IJMPD Editorial Board (World Scientific)". www.worldscientific.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-26.
  4. "Peter Dunsby - Google Scholar Citations". scholar.google.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
  5. "Peter K. S. Dunsby". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
  6. "Southern African Association for the Advancement of Science (S2A3) Award | University of Cape Town". www.uct.ac.za (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-26.
  7. "Science Faculty's Professor Peter Dunsby honoured at NSTF Awards | Faculty of Science". www.science.uct.ac.za (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-26.
  8. "UCT's new Fellows. |University of Cape Town". www.uct.ac.za (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
  9. "ATel #11448: Very bright optical transient near the Trifid and Lagoon Nebulae". ATel. பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.
  10. "Astronomer Announces He Has Discovered ... Mars". Live Science. https://www.livescience.com/62094-astronomer-discovers-mars.html. 
  11. "For 40 minutes he thought he had discovered a new object, but it turned out to be Mars" (in en). Newsweek. 2018-03-22. http://www.newsweek.com/space-discovery-mars-object-photo-857285. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_துன்சுபி&oldid=3618273" இலிருந்து மீள்விக்கப்பட்டது