பீட்டர் ஷோல்ஸ்

பீட்டர் ஷோல்ஸ் (பிறப்பு: 11 டிசம்பர் 1987) என்பவர் செருமனியைச் சேர்ந்த கணிதவியலாளர் ஆவார். இவர் எண்கணிதம் மற்றும் இயற்கணித வடிவவியலில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். செருமனியின் பொன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[1]. வடிவ கணிதம், தன்வடிவப் படிவக் கோட்பாடு ஆகியவற்றில் தனித்துவக் கருத்துக்களைக் கூறியமைக்காக 2013 ஆம் ஆண்டுக்கான சாஸ்த்ரா இராமானுஜன் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2] இவர் கணித மேதை ராமானுஜத்தின் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட ஆண்டில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பீட்டர் சோல்ஸ்
Peter Scholze
பிறப்பு11 திசம்பர் 1987 (1987-12-11) (அகவை 36)
டிரெஸ்டன், கிழக்கு செருமனி
தேசியம்செருமனியர்
துறைகணிதம்
பணியிடங்கள்பொன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பொன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்மைக்கேல் ராப்பபோர்ட்
விருதுகள்சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு (2013)
பிள்ளைகள்1

சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு

தொகு

கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டு முதல் கணித மேதை ராமானுஜன் நினைவாக ஆண்டுதோறும் ராமானுஜன் என்ற பரிசை வழங்கிவருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் அறிஞருக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். ராமானுஜன் தன் 32 வயதில் தான் வியக்கத்தக்க சாதனை புரிந்தார் என்பதால் இப்பரிசிற்கான வயது வரம்பு 32 ஆக வைக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டுக்கான இப்பரிசுக்கு பீட்டர் ஷோல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேர்வுக் குழு

தொகு

இந்த ஆண்டில் (2013) இல் பரிசுக்கு பீட்டர் ஷோல்சைத் தேர்ந்தெடுத்த குழு உறுப்பினர்கள் பட்டியல்:

  • பேராசிரியர் கிருஷ்ணசுவாமி அல்லாடி (குழுத் தலைவர் - புளோரிடா பல்கலைக்கழகம்)
  • காத்ரீன் பிரிங்மேன் (கோலோன் பல்கலைக்கழகம்)
  • ரோஜர்ஹீத் ப்ரவுன் (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்)
  • டேவிட் மாசர் (பேசல் பல்கலைக்கழகம்)
  • பேரிமசூர் (ஹார்வர்டு பல்கலைக்கழகம்)
  • கென்ரிபே (கலிபோர்னியா பல்கலைக்கழகம்)
  • வார்னரர் (க்வீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம்)

மேற்கோள்கள்

தொகு
  1. "HCM: Prof. Dr. Peter Scholze". Hcm.uni-bonn.de. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.
  2. சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு: நிகழாண்டு ஜெர்மனி பேராசிரியருக்கு வழங்க முடிவு, தினமணி, அக்டோபர் 1, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஷோல்ஸ்&oldid=2744326" இலிருந்து மீள்விக்கப்பட்டது