பீனா அகர்வால்

பீனா அகர்வால் (Bina Agarwal) பொருளாதாரப் பேராசிரியரும், தில்லி பல்கலைக்கழகப் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனரும் ஆவார். இவர் நிலம், வாழ்வாதாரம் மற்றும் சொத்துரிமை, சூழல் மற்றும் வளர்ச்சி, அரசியல் பொருளாதாரம், வறுமை மற்றும் சமத்துவமின்மை, சட்ட மாற்றம், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் A Field of One's Own: Gender and Land Rights in South Asia என்ற புத்தகம், அரசாங்கங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச நிறுவனங்களும், நிலம் மற்றும் சொத்துரிமையில் பெண்களின் உரிமைகளை ஊக்குவிப்பதில் எப்படிப் பங்காற்றின என்பதை அழுத்தமாகக் கூறியது. இது லத்தின் அமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தூண்டியது.[2]

பீனா அகர்வால்
பீனா அகர்வால், உலக பொருளாதார மன்றம் 2012ல் நடைபெற்றபோது
பிறப்பு1951[1]
துறைபாலினச் சமத்துவம், பேரம் பேசும் அணுகுமுறை, கூட்டுறவு மோதல்[1]
பயின்றகம்கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்
தில்லி பல்கலைக்கழகம்
விருதுகள்ஆனந்த கெந்திசு குமாரசுவாமி புத்தகப் பரிசு 1996, எட்கர் கிரகாம் புத்தக பரிசு 1996, கே.எச் பதேஜா விருது 1995-96

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Enotes page on Bina Agarwal"
  2. "Notes on contributors". Feminist Economics, special issue on the work of Amartya Sen (Taylor and Francis) 9 (2–3): 333–335. 2003. doi:10.1080/1354570032000114554. http://dx.doi.org/10.1080/1354570032000114554. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனா_அகர்வால்&oldid=3924255" இலிருந்து மீள்விக்கப்பட்டது