பீனிக்ஸ் குடியிருப்பு

பீனிக்ஸ் குடியிருப்பு (Inanda, KwaZulu-Natal) என்பது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியிருப்பு ஆகும். 1904 இல் தென் ஆப்பிரிக்காவில் வாழ்த்து வந்த மோகன்தாசு கரம்சந்த் காந்தி, 'இந்தியன் ஒப்பீனியன்' பத்திரிக்கையை நகரத்தைவிட்டு வெளியே அச்சிட விரும்பினார். இனாண்டாவின் புறநகரில் இடம் ஒன்றை வாங்கி பீனிக்ஸ் குடியிருப்பை உருவாக்கினார். மரங்களும் பாம்புகளும் நிறைந்த இடத்தை சுத்தம் செய்து வீடுகள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், அச்சகம் ஆகியவை கட்டப்பட்டன. பீனிக்ஸ் குடியிருப்பில் அனைவரும் அங்கேயே வேலை செய்து வருமானம் ஈட்டிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. சில ஆங்கிலேயர்கள், தமிழர்கள், வட இந்தியர்கள், ஜுலு மற்றும் குஜராத்திகள் குடியேறினர். காந்திஜி சில காலம் அங்கே வசித்தார். பிறகு அடிக்கடி வந்து சென்றார். காந்திஜியின் முக்கியமான வீடாக விளங்கியது பீனிக்ஸ் குடியிருப்பு.[1]

காந்திஜி,தென் ஆப்பிரிக்கா, 1906.
குடியிருப்பு வாசிகளுடன் காந்திஜி

இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கை

தொகு

குடியிருப்பு வாசிகள் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கை வெளிவர கடுமையாக உழைத்தனர். பத்திரிக்கை வெளிவரும் முந்தைய இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்தனர். சமூக உரிமைகள் பற்றி பேசிய இந்தியன் ஒப்பீனியன், 4 மொழிகளில் வெளிவந்தது.

 
இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கை

கலவரம்

தொகு

காந்திஜி வெளியேறிய பிறகும் மக்கள் இங்கே வசித்துவந்தனர். காந்திஜியின் மகன் மணிலால் காந்தி இங்கே வசித்தார். 1980களில் குடியிருப்பைச் சுற்றி பாம்பேயி எனும் குடிசை வாழ் மக்கள் குடியேறினர். 1985இல் நடந்த ஒரு கலவரத்தில் பெரும்பான்மையான கட்டிடங்கள் சேதமாயின. இதனால் குடியிருப்பை மக்கள் காலி செய்தனர். 2000இல் அதிபர் தாபோ முக்கி மீண்டும் குடியிருப்பை சீர் செய்து திறந்து வைத்தார்.

மேற்கோள்கள்

தொகு

https://en.wikipedia.org/wiki/Inanda,_KwaZulu-Natal#Gandhi_and_the_Phoenix_Settlement

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனிக்ஸ்_குடியிருப்பு&oldid=4141511" இலிருந்து மீள்விக்கப்பட்டது