பீபி நாச்சியார்
பீபி நாச்சியார் என்பவர் மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில் உற்வசர் செல்வ நாராயணர் மேல் அன்பு கொண்ட இசுலாமிய பக்தையாவார். [1]
மேலக்கோட்டையில் தங்கியிருந்த இராமானுசர் கனவில் வந்த திருமால், தமது உற்சவர் சிலை இசுலாமிய அரசனால் கொள்ளையடிக்கப்பட்டு, தில்லியில் இருப்பதாகத் தெரிவித்தார். அதனை மீட்க இராமானுசர் தில்லி சென்று, இளவரசியின் அரண்மனையிலிருந்த விக்ரகத்தினை மீட்டுக் கொண்டுவந்தார். செல்வ நாராயணரை பிரிந்திருக்க இயலாமல் மொகலாய இளவரசியும் இராமானுசரை பின் தொடர்ந்தார். இசுலாமியப் பெண் என்பதால் கோவிலினுள் அனுமதி மறுத்தவர்கள், இராமானுசரின் வேண்டுகோளை ஏற்று அனுமதித்தனர். கோவிலுள் நுழைந்த இசுலாமிய இளவரசி திருமாலுடன் இணைந்ததாக நம்பப்படுகிறது. [2] [3]
ஆதாரம்
தொகு- ↑ http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=3 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு ஆசிரியர்: டாக்டர்.வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் B.A., காரைக்குடி
- ↑ http://www.tamilbtg.com.md-40.webhostbox.net/edition-December2012/dec4.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=35 அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில் தினமலர் கோவில்கள்