பீம் சிங்

இந்திய உயரம் தாண்டும் வீரர்

பீம் சிங் (Bhim Singh (athlete)) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரர் ஆவார். 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று அரியானா மாநிலத்திலுள்ள தன்னா என்ற கிராமத்தில் இவர் பிறந்தார். உயரம் தாண்டுதல் விளையாட்டில் இவர் இந்தியாவை பிரநிதிதுவப்படுத்தினார். 1968 ஆம் ஆண்டில் மெக்சிகோ நகரத்தில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பீம் சிங் பங்கேற்றார்.[1] பேங்காக்கில் நடைபெற்ற 5 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இவர் அப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இவரது பெயரில் அரியானா அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் பீம் விருது என்ற உயரிய விளையாட்டு விருதை வழங்கி வருகிறது. பீம் விருது 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை உள்ளடக்கியதாகும்.

பிவானியிலுள்ள பீம் விளையாட்டரங்கமும் பீம் சிங்கின் நினைவாக கட்டப்பட்டதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "பீம் சிங்". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்_சிங்&oldid=3762899" இலிருந்து மீள்விக்கப்பட்டது