புகலிட உரிமை
ஒரு நாட்டில் அரசியல் நோக்கில் துன்புறுத்தப்படும், வாழ்வுக்கு அச்சுறுத்தல் செய்யப்படும் ஒருவர் இன்னொரு நாட்டுக்குச் சென்று வாழ்வதற்கான உரிமையே புகலிட உரிமை (Right of Asylum or Political Asylum) ஆகும். இது உலக மனித உரிமைகள் சாற்றுரையில் உறுப்புரை 14 இலும், அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை ஊடாகவும், ஜெனீவா உடன்படிக்கை ஊடாகவும், பல்வேறு நாடுகளின் சட்டங்களின் ஊடாகவும் நிலைநாட்டப்படும் ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும்.
இந்த உரிமை கடந்த சில பத்தாண்டுகளாக ஐரோப்பா, வட அமெரிக்கா, அசுத்திரேலியா, இந்தியா ஆகிய இடங்களில் மதிக்கப்பட்டு வந்தாலும், அண்மைக் காலமாக புகலிடம் கோரும் அகதிகள் எண்ணிக்கையைக் குறைக்கும் வண்ணம் இங்கு புகலிட உரிமையை மட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டுவருகின்றன. [1]
மேற்கோள்கள்தொகு
- ↑ "The Right to Seek Asylum: A Dwindling Right?". 2014-11-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-11 அன்று பார்க்கப்பட்டது.