புகுயாமா ஒடுக்கம்

தயோயெசுத்தர் ஓர் ஆல்டிகைடாக ஒடுக்கப்படும் வினை

புகுயாமா ஒடுக்கம் (Fukuyama reduction) என்பது ஒரு கரிம வேதியியல் ஒடுக்க வினையாகும். இவ்வினையில் ஒரு தயோயெசுத்தர் ஒரு ஆல்டிகைடாக ஒடுக்கப்படுகிறது. வினையூக்கி அளவு பலேடியம் முன்னிலையில் சிலில் ஐதரைடு இவ்வினையை நிகழ்த்துகிறது. தொக்ரு புகுயாமா இவ்வினையை 1990 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்[1]. இவ்வினையின் அசல் நோக்கம் சிலில் ஐதரைடு டிரையெத்தில்சிலேனுக்காகவும், வினையூக்கி பலேடியம் கார்பனுக்காகவும் பயன்படுகின்றன.

புகுயாமா ஒடுக்கம்

தயோயெசுத்தர் சேர்மத்தின் முன்னோடியான கார்பாக்சிலிக் அமிலங்களை ஆல்டிகைடுகளாக மாற்றுவதற்கு புகுயாமா ஒடுக்க வினை பயன்படுகிறது. இரண்டாம் நிலை ஒடுக்கத்தினால் ஆல்ககால் உருவாவதற்கு வாய்ப்பிருப்பதால் இச்செயல்முறை கடினமானதாகக் கருதப்படுகிறது.

வினை வழிமுறை

தொகு

வினையூக்க சுழற்சியே புகுயாமா ஒடுக்க வினைக்கன அடிப்படை வினை வழிமுறையாகும். * ஆக்சிசனேற்ற கூட்டுவினை:

  •  
  • உலோக ஈனிமாற்ற வினை:
     
  • ஒடுக்க நீக்கம்:
     

எல்லை

தொகு

புகுயாமா ஒடுக்க வினையின் மாறுபட்ட வினைகளில் மைய போரான்-டைபிர்ரோமெத்தேன் மூலக்கூறு தயாரிக்கப்படுகிறது :[2][3]

 

தொடர்புடைய புகுயாமா பிணைப்பு வினையில் ஐதரைடு கார்பன் மின்னணு மிகுபொருளால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Facile reduction of ethyl thiol esters to aldehydes: application to a total synthesis of (+)-neothramycin A methyl ether Tohru Fukuyama, Shao Cheng Lin, Leping Li J. Am. Chem. Soc., 1990, 112 (19), pp 7050–7051 எஆசு:10.1021/ja00175a043
  2. The Smallest and One of the Brightest. Efficient Preparation and Optical Description of the Parent Borondipyrromethene System. I. J. Arroyo, R. Hu, G. Merino, B. Z. Tang, E. Peña-Cabrera, J. Org. Chem. 2009, ASAP
  3. Additional reagents CuTC, Pd(dba)2, tri(2-furyl)phosphine
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகுயாமா_ஒடுக்கம்&oldid=2748331" இலிருந்து மீள்விக்கப்பட்டது