புகையிலைக் கட்டை உருட்டுதல்

தமிழ்நாட்டு விளையாட்டுகளில் விளையாடுவதற்கு முன் பட்டவரைத் தேர்ந்தெடுக்கப் புகையிலைக் கட்டை உருட்டுவர். புகையிலை விளையும் பகுதிகளில் இது நிகழும்.

விளையாட்டில் பங்குபெறுவோர் அனைவரும் வரிசையாகப் பக்கவாட்டில் ஒருவரோடொருவர் உரசிக்கொண்டு நிற்பர். அவருக்குப் பின்புறம் புகையிலைக் கட்டு ஒன்று உருட்டப்படும். புகையிலைக்கட்டு யாருடைய நிழலில் நிற்கிறதோ அவர் பட்டவர் என முடியும்.

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954