புக்கும் தீவு
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
புலாவ் புக்கும், சிங்கப்பூரின் பிரதான தீவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 1.45 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இந்த தீவில் ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்குகளும், சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளன.
சொற்தோற்றம்
தொகுரன்கேக் புக்கும் என்ற ஒருவகை சிப்பிகள் இங்க காணப்பட்டதாலோ அல்லது அந்த வடிவத்தில் இந்தத் தீவு இருந்த காரணத்தாலோ இந்தத் தீவிற்கு இந்தப் பெயர் வந்தது.
தீவிரவாதத் தாக்குதல்
தொகு1974, 31 சனவரி அன்று இந்த தீவை நான்கு தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் தாக்கினர். இதை லஜு சம்பவம் என்று கூறுவர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. ஐந்து பிணைக்கைதிகளுடன் சில நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் அனைவரும் பத்திரமாக குவைத் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தையைத் தலைமை ஏற்று நடத்தியவர் பிற்காலத்தில் சிங்கப்பூரின் அதிபரான திரு.நாதன் ஆவார்