புன்செய் நிலம்

(புஞ்சை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புன்செய் நிலம் என்பது மழை நீரை நீர் ஆதாரமாகக் கொண்ட நிலமாகும். தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத நிலப் பகுதிகள் புன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இந்நிலத்தில் நீர் ஆதாரம் குறைவாகத் தேவைப்படும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. புன்செய் நிலப்பகுதியில் பாசன வசதிக்காக சொட்டு நீர்ப்பாசனம், ஏரிப் பாசனம் அமைக்க தமிழக அரசு வழிவகை செய்கிறது. இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக பருத்தி, மிளகாய், சோளம், கம்பு, வரகு, தினை, வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு சோளம், கருஞ்சோளம், அரிசிக்கம்பு, செந்தினை, கருந்தினை, பைந்தினை, பெருந்தினை, சிறுதினை, காடைக்கண்ணி, கேழ்வரகு(கேப்பை), வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற சிறுதானிய வகைகள் மற்றும் பயறு வகைகள் மட்டுமே விளைவிக்கப் படுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு போகம் வரை வேளாண்மை செய்யும் நிலத் தொகுதி புன்செய் எனப்படுகிறது.[1] 5 ஏக்கருக்கும் குறைவாக சொந்த புன்செய் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை சார்பாக மானியத்துடன் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு
  1. "பூவுலகின் நண்பர்கள் தளம்". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்செய்_நிலம்&oldid=3717932" இலிருந்து மீள்விக்கப்பட்டது