புடவை நோன்பு
புடவை நோன்பு என்பது நாட்டார் வழிபாடுகளில் ஒன்றாகும். இதனை புடவை படைத்தல், புடவை வேட்டி படைத்தல், புடவை வழிபாடு என அழைக்கின்றனர்.[1]
புடவை வழிபாடு
தொகுதை மாதம் முதல்நாள் தங்களது முன்னோர்களை நினைவுகூற இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. முன்னோர்கள் பயன்படுத்திய வேட்டி சேலை அல்லது இவைகளில் ஒன்றை வருடத்திற்கு ஒரு முறை எடுத்து வழிபடுகின்றனர். இதற்காக முதல்நாளே நன்னீர் நிலைகளில் சுத்தம் செய்து வைக்கின்றனர்.
இந்த துணிகளை முறுக்கி பலகைகட்டையின் மீது வைத்து அலங்காரம் செய்கின்றனர். தலைவாழை இட்டு அதில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை வைத்து படைக்கின்றனர். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கலில் குழி அமைத்து கோழிக்கழி குழம்பு ஊற்றி படையல் இடுகின்றனர்.
தேங்காய் உடைத்து, தூப ஆராதனைகள் காட்டிய பிறகு சூடம் வைத்து ஆராதனை செய்கின்றனர். சூடம் அனைந்த பிறகு இலையிலிருக்கும் உணவுகளை காக்கைக்கு வைக்கின்றனர். முன்னோர்களே காக்கைகளாக வந்து உண்பதாக நம்புகின்றனர். காக்கை சாதம் எடுத்த பிறகே உண்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் புடவை படைத்தலின் போது பெட்டை கோழிகளை சமைத்து படைக்கும் வழக்கமுள்ளது.
சிலர் முன்னோர்கள் பயன்படுத்திய ஆடைகளுக்கு பதிலாக புதிதாக வாங்கி படைப்பதும் வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு புதிதாக ஆடை வாங்கி படைத்தால் அதனை மாலை நேரத்தில் சூடம் காட்டி வழிபட்ட பிறகு கட்டிக் கொள்கின்றனர்.
ஆதாரங்கள்
தொகு- ↑ பட்டிப்பொங்கல் - முனைவர் இராசப்பா பெரியசாமி, எம்.ஏ.,எம்ஃபில்.,பிஹச்டி, அரசு கலைக்கல்லூரி. நூல்- நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் - இரா. சந்திரசேகரன் பக்கம்-59