புணர்ச்சி விகாரம்

கெடுதல் புணர்ச்சி எடுத்துக்காட்டு

விகாரம் என்பது இயல்பு மாற்றம்.

மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர். நிலைமொழி, வருமொழி எனப் புணரும் சொற்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இவை புணரும்போது எந்த வகையான மாற்றமும் இன்றி இணையுமானால் அதனை இயல்பு அல்லது இயல்புப் புணர்ச்சி என்கின்றனர்.[1] முதலில் நிற்கும் நிலைமொழியிலோ, இறுதியில் அதனோடு வந்து சேரும் வருமொழியிலோ மாற்றம் நிகழ்ந்தால் அதனை விகாரப் புணர்ச்சி என்றோ, புணர்ச்சி விகாரம் என்றோ கூறுகின்றனர். இது இருவகை மொழியிலும் மொழியின் முதலிலோ, இடையிலோ, கடையிலோ நிகழும்.[2]

உதாரணம் தொகு

தோன்றல் நன்றென்னா நன்றென்னா வருமொழி முதலில் மெய் தோன்றிற்று
திரிதல் அல் திணை அஃறிணை வருமொழி முதலிலும், நிலைமொழி ஈற்றிலும் உள்ள மெய்கள் திரிந்தன
கெடுதல் நிலம் வலயம் நில வலயம் நிலைமொழி ஈற்றிலுள்ள [ம்] கெட்டது
திரிதலும், கெடுதலும் ஆறு பத்து அறுபது 'ஆறு' என்னும் நிலைமொழியில் உள்ள முதலெழுத்தின் நீட்சிதெ திரிபும், 'பத்து' என்னும் வருமொழியில் உள்ள [த்] என்னும் இடையொற்றுக் கேடும் நிகழ்ந்துள்ளன
தோன்றல், திரிதல், கெடுதல் மூன்றும் பனை காய் பனங்காய் நிலைமொழி 'பனை' என்பதில் உள்ள [ஐ] கெட்டது. 'அம்' என்னும் சாரியை தோன்றிற்று. 'அம்' சாரியை வருமொழிக்கு ஏற்ப 'அங்' எனக் கெட்டது.
மொழியின் மூவிடத்தும் கெடல் ஒன்பது பத்து தொண்ணூறு நிலைமொழியும், வருமொழியும், முதல், இடை, கடை என்னும் மூவிடத்தும் கெட்டன.[3]

உயிர் முன் உயிர் (உயிரோடு உயிர்) தொகு

உயிர் முன் உயிர் வரின் அங்கு நிலைமொழியும் வருமொழியும் இணையாது. உயிரும் மெய்யும் இணைவதே தமிழ் இலக்கண மரபு. ஆகையால் அதனைத் தமிழ்மரபுக்கு ஏற்றபடி மாற்றும் வகையில் வ்,ய் __ஆகிய மெய் எழுத்துகளில் ஏதேனும் ஒன்று அத்தகு சொற்களுக்கு இடையில் தோன்றும். இத்தகு முறைக்கு உடம்படுமெய் என்று பெயர்.

அ முதல் ஊ வரை தொகு

நிலைமொழி வருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
தீ + அவர் _தீயவர் - அளவு + அறிந்து _அளவறிந்து- - - - -
ஆ+அடு=ஆவடு துறை தே+ ஆரம் _தேவாரம் மா+இலை=மாவிலை [4]
மா+இரு=மாயிரு ஞாலம் [5]
ஆ+இரு=ஆயிரு திணை [6]
- -
மொழி+அறிவு=மொழியறிவு மொழி+ஆக்கம்=மொழியாக்கம் மொழி+இயல்=மொழியியல் மொழி+ஈறு=மொழியீறு வெளி+உலகம்=வெளியுலகம் வெளி+ஊர்=வெளியூர்
திரு+அருள்=திருவருள் திரு+ஆரூர்=திருவாரூர் திரு+இடம்=திருவிடம் திரு+உள்ளம்=திருவுள்ளம் கரு+ஊர்=கருவூர்
(கரு=மேன்மையானது, உயர்ந்தது)
பூ+அழகி=பூவழகி பூ+ஆரம்=பூவாரம் பூ+இதழ்=பூவிதழ் பூ+உலகம்=பூவுலகம்
சே+அடி=சேயடி
சே+அடி=சேவடி
வாழை+அடி=வாழையடி ஔவை+ஆர்=ஔவையார் வாழை+இலை=வாழையிலை கடை+ஈறு=கடையீறு திரை+உலகம்=திரையுலகம் உறை+ஊர்=உறையூர்
(ஔ)

எ முதல் ஔ வரை தொகு

நிலைமொழி வருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
- - - - - -
திரு+ஓடு=திருவோடு
பூ+எல்லாம்=பூவெல்லாம்
வினை+எச்சம்=வினையெச்சம் கடை+ஏழு=கடையேழு பனை+ஓலை=பனையோலை
(ஔ)

வருமொழியின் முதலெழுத்து வல்லினம் தொகு

நிலைமொழி ஈறு (கடையெழுத்து) வருமொழி முதலெழுத்து க் வருமொழி முதலெழுத்து ச் வருமொழி முதலெழுத்து த் வருமொழி முதலெழுத்து ப்
பூப்பெயர் புணர்ச்சி பூ+கொடி=பூங்கொடி
பூ+கொடி=பூக்கொடி
பூ+செடி=பூஞ்செடி
பூ+செடி=பூச்செடி
பூ+தொட்டி=பூந்தொட்டி
பூ+தொட்டி=பூத்தொட்டி
பூ+பந்தல்=பூம்பந்தல்
பூ+பந்தல்=பூப்பந்தல்
ஞ் உரிஞ் [7] உரிஞு கொற்றா [8]
உரிஞுக் கொற்றன் [9]
உரிஞு சாத்தா
உரிஞுச் சாத்தன்
உரிஞு தத்தா
உரிஞுத் தத்தன்
உரிஞு பாணா
உரிஞுப் பாணன்
ண் மண்+கலம்=மட்கலம் கண்+செவி=கட்செவி மண்+துகள்=மட்துகள் மண்+பாண்டம்=மட்பாண்டம்
ந்
ம் உம்+கள்=உங்கள்
செம்மை+கல்=செங்கல்
குற்றம்+சாட்டு=குற்றச்சாட்டு
குற்றம்+சாட்டு=குற்றஞ்சாட்டு
செய்யும்+செயல்=செய்யுஞ்செயல்
செம்மை+தமிழ்=செந்தமிழ் செம்மை+பணி=செம்பணி
நிலம்+புலம்=நிலபுலம்
ய்
ர்
ல் நால்+காலி=நாற்காலி
நல்+கொடை=நன்கொடை
கல்+சிலை=கற்சிலை
வல்+சொல்=வன்சொல்
பல்+துளி=பஃறுளி
அல்+திணை=அஃறிணை
பல்+தோற்றம்=பன்தோற்றம்
வில்+படை=விற்படை
மெல்+பொருள்=மென்பொருள்
வ்
ழ்
ள் நாள்+காட்டி=நாட்காட்டி
வெள்+குடை=வெண்குடை
கோள்+சொல்=கோட்சொல்
வெள்+சிறகு=வெண்சிறகு
நாள்+தோறும்=நாட்தோறும்
வெள்+தாமரை=வெண்தாமரை
கள்+பானை=கட்பானை
வெள்+படை=வெண்படை
ன் முன்+காலம்=முற்காலம் முன்+செல்=முற்செல் பொன்+தொடி=பொற்றொடி முன்+பகல்=முற்பகல்

வருமொழியின் முதலெழுத்து மெல்லினம் தொகு

நிலைமொழி ஈறு (கடையெழுத்து) வருமொழி முதலெழுத்து ஞ் வருமொழி முதலெழுத்து ந் வருமொழி முதலெழுத்து ம்
ஞ்
ண் விண்+ஞானம்=விஞ்ஞானம்
ந்
ம் செம்மை+ஞாயிறு=செஞ்ஞாயிறு செம்மை+நிலம்=செந்நிலம் செம்மை+மண்=செம்மண்
ய்
ர்
ல் பல்+நிலை=பன்னிலை நல்+மை=நன்மை
பல்+மடங்கு=பன்மடங்கு
வ்
ழ்
ள் வெள்+நிலா=வெண்ணிலா
எள்+நெய்=எண்ணெய்
வெள்+மை=வெண்மை
ஆள்+மை=ஆண்மை
பெள்+மை=பெண்மை
நாள்+மலர்=நாண்மலர்
ன் முன்+நாள்=முன்னாள்

வருமொழியின் முதலெழுத்து இடையினம் தொகு

நிலைமொழி ஈறு (கடையெழுத்து) வருமொழி முதலெழுத்து ய் வருமொழி முதலெழுத்து வ்
ஞ்
ண்
ந்
ம் செம்மை+வாழை=செவ்வாழை
நிலம்+வலயம்=நிலவலயம்
ய்
ர்
ல்
வ்
ழ்
ள்
ன்

வேறுபாடு தொகு

புணர்ச்சி விகாரம் செய்யுள் விகாரம்
புணரும் நிலைமொழியிலும், வருமொழியிலும், தொடர்மொழியிலும் வரும் தனிமொழியிலும் வரும்
உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வரும் செய்யுளில் மட்டும் வரும்

அடிக்குறிப்பு தொகு

  1. விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே (நன்னூல் 153)
  2. தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
    மூன்றும் மொழி மூவிடத்தும் ஆகும் (நன்னூல் 154)
  3. இந்த விதியை மொழியியலார் ஏற்றுக்கொள்வதில்லை
  4. மா -பெயர்ச்சொல்
  5. மா - உரிச்சொல்
  6. ஆ - சுட்டு
  7. பெயர்ச்சொல் நிலையில் தோல் என்றும் வினைச்சொல் நிலையில் தோல் உரிதலையும் உணர்த்தும்
  8. ஏவல் வினை
  9. பெயர்ச்சொல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புணர்ச்சி_விகாரம்&oldid=3402452" இலிருந்து மீள்விக்கப்பட்டது