புண்ணாக்கு

எண்ணெயில் இருந்து எடுக்கப்பட்ட மீதமுள்ள சக்கை

எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்தபின் கிடைக்கும் மீதம் உள்ள சக்கைப் பொருளே புண்ணாக்கு ஆகும்.[1][2][3]

தேங்காய்ப் புண்ணாக்கு

தொகு

புண்ணாக்கு தேங்காயிலிருந்து செய்யப்படும் ஓர் உணவுப் பொருளாகும். பொதுவாக இது மாடுகளுக்கு உணவாகக் கொடுக்கப்படுகிறது. சில உணவகங்களில் தேங்காய்க்குப் பதிலாக தேங்காய் புண்ணாக்கைப் பயன்படுத்தி தேங்காய் சட்டினியும் செய்கிறார்கள்.

கடலைப் புண்ணாக்கு

தொகு

நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துத் தாவரங்களிலிருந்து எண்ணெய் எடுத்தபின் நமக்கு கடலை புண்ணாக்கு கிடைக்கிறது.

எள்ளுப் புண்ணாக்கு

தொகு

எள்ளை ஆட்டி நல்லெண்ணெய் எடுப்பார்கள். அப்போது அதில் மிஞ்சியிருக்கும் பொருளே எள் புண்ணாக்கு ஆகும்.

புண்ணாக்கின் பயன்பாடு

தொகு

பொதுவாக புண்ணாக்கு மாட்டுத்தீவனமாக உபயோகப் படுத்தப்படுகிறது. பால் கறக்கும் மாடுகளுக்கு பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் கலந்து கொடுப்பது வழக்கமாகும்.

இவற்றையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Editors of Encyclopaedia Britannica (3 May 2021). "Oil cake | Definition, Oilseed, & Uses". Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 September 2024.
  2. George, Rosie (14 October 2001). "UK planned to wipe out Germany with anthrax". Sunday Herald (Glasgow). ProQuest 331261246. 
  3. Tavares, Paloma; Oliveira, Izamara; Turmina, Roberta; Fluck, Ana; Amanda, Renata; Fernandes, Aguilar; Macagnan, Rodrigo; Zorzi, Laura et al. (June 8, 2022). "COMPOSIÇÃO NUTRICIONAL DE SUBPRODUTOS DO BIODIESEL" (in pt-br). Conference: Zootecnia Brasil 2018 - 55° Reunião Anual da Sociedade Brasileira de Zootecnia e 28° Congresso Brasileiro de Zootecnia. https://www.researchgate.net/publication/361160795. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புண்ணாக்கு&oldid=4100904" இலிருந்து மீள்விக்கப்பட்டது